ARTICLE AD BOX
ஒவ்வொரு வருடமும் பொங்கல் போன்ற விசேஷ பண்டிகைகளுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசுத்தொகை மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வருடமும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதத்தில் பொது மக்களுக்கு ரேஷன் கடை மூலம் அரிசி, கரும்பு, சர்க்கரையுடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதனுடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டது.
ஆனால் பொதுமக்கள் பலருக்கும் இந்த இலவச வேட்டி சேலை வழங்கப்படவில்லை என்று அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், "ஜனவரி மாதத்தில் பொங்கலுக்கான இலவச வேட்டி சேலைகளை வாங்காத நபர்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களது இலவச வேட்டி சேலைகளை பெற்றுக் கொள்ளலாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.150 கோடி மதிப்புள்ள 90 ஏக்கர் நிலம்; முதல்வர் பிறப்பித்த உத்தரவு., துணை முதல்வர் அறிவிப்பு.!
இதையும் படிங்க: #Breaking: கல்விக்கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!