ARTICLE AD BOX
கால அட்டவணை அமைத்து கொள்க: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள், எப்போது செய்யப்போகிறீர்கள் என்று திட்டமிட்டு செயல்பட்டால் எப்போதும் வெற்றி வந்து சேரும்.
பல வேலையை ஒரே நேரத்தில் செய்யாதீர்கள்: பல வேலையை ஒரே நேரத்தில் செய்யமுடியாது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால் முதலில் என்ன செய்ய வேண்டுமென அதை தேர்ந்தெடுத்து ஒன்றை முடித்து இடைவெளிவிட்டு அடுத்த வேலைக்கு செல்லலாம்.
துண்டு துண்டாகப் படியுங்கள்: படிப்பதற்கு அதிக நேரம் செலவாகும், இதனால் வேலைகளை சின்ன சின்ன துண்டுகளாகப் பிரித்து, ஒவ்வொரு துண்டையும் முடித்த பிறகு அடுத்த நிலைக்கு செல்லுங்கள்.
நன்றாக உறங்குங்கள்: ஒவ்வொரு இரவும் குறைந்தது எட்டுமணி நேரங்கள் உறங்குவது முக்கியம். இது உங்களது கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும்.
அட்டவணை அமைக்கவும்: படிப்பதற்கு எந்த நேரம் சிறப்பாக உள்ளது. பள்ளியில் இருந்து வந்து சிற்றுண்டி ஏதாவது சாப்பிட்டு விட்டு பிறகு வேலை செய்வது சிறப்பாக உள்ளதா அல்லது நீங்கள் இரவு உணவுக்குப் பிறகு சிறப்பாக உள்ளதா? என்று உங்கள் நேரத்தை நிர்வகிக்க திட்டமிடவும். தனிநபர் அட்டவணை அமைக்கவும் மற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் நேரத்தை ஒதுக்கவும்.
குறிப்பெழுதி வைத்துக்கொள்ளுங்கள்: வகுப்பில் ஈடுபடும் நேரம் முக்கியமான கருத்துக்களை குறிப்பெடுக்க வேண்டும் மற்றும் தேர்வு நேரம் வந்தபோது படிக்க வேண்டியவற்றை தலைப்புகளை குறித்து வைத்துக் கொண்டால் ஒன்றும் விட்டு போகாமல் படிக்க வசதியாக இருக்கும்.
படிக்கவும்: பரிட்சை ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அனைத்து பாடங்களையும் ஒரு முறை படித்து பொருளை புரிந்துவைத்துக் கொண்டால் பின்னர் படிக்கும்போது விரைவாக படிக்க முடியும். குறைந்த நேரத்தில் படித்து முடித்து விடலாம்.
உங்களது படிப்பு இடத்தை நிர்வகிக்கவும்: உங்களை அதிகபட்சமாகச் செயலாக்கக் கூடிய இடம் தேடுங்கள். தொலைக்காட்சி மற்றும் பிற தடை இல்லாத இடங்களை தேடுங்கள். அமைதியான சூழலை அமைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு படிப்பு குழுவைக் கண்டறியுங்கள்: ஒரே விஷயத்தை கற்றுக் கொள்பவர்களுடன் அமர்ந்து கற்றுக்கொள்ளும் பொருள்களை கற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் நினைவில் வையுங்கள்.
கேள்விகள் கேளுங்கள்: சந்தேகத்தை கேட்டு புரிந்து கொள்வதற்கு கேள்விகள் பல கேட்க தயங்கவேண்டாம்.
பாடங்களை மீளாய்வு: முதலில் முக்கியமான தலைப்புகளை மீளாய்வு செய்யவும். குறிப்புகளை படித்துப் பாருங்கள்.
பயிற்சி காகிதங்கள்: முந்தைய ஆண்டு கேள்வி பேப்பர்களை மற்றும் மாதிரி தேர்வுகளை செய்து பாருங்கள். தேர்வுகளை செய்து நீங்களே திருத்தம் செய்யும் போது மனதில் நன்கு பதிந்துவிடும்.
ஓய்வு நேரம்: தொடர்ந்து படிப்பது மட்டும் இல்லை, ஓய்வை எடுத்து புத்துணர்ச்சி பெறவும்.
உணவு: ஆரோக்கியமான உணவு உண்பது மற்றும் போதிய தூக்கம் உறுதி செய்யுங்கள்.
உறுதிப்படுத்தல்: பரிட்சை இடம், அட்டை மற்றும் தேவையான பொருட்கள் ஆகியவற்றை முன்கூட்டியே ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள்.
உற்சாகமாக இருங்கள்: மனதில் எந்தவித அச்சமும் இன்றி நேர்மறை மனப்பாங்குடன் தேர்வுக்கு சென்றால், வெற்றி நிச்சயம்.