ARTICLE AD BOX
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், திரைப்பட விநியோகிஸ்தராகவும் வலம்வந்தவர் ராஜ்கிரண். இவர் தனது புகைப்படத்தை பயன்படுத்தி நபர் ஒருவர் மோசடி செயலில் ஈடுபட முற்படுவதாக தகவல் தெரிவித்து, அதுகுறித்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பலரும் புகைப்படம் எடுப்பார்கள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், "நான் நடிகர் என்பதால், என்னை வைத்து திரைப்படம் தயாரிக்க என சிலர் என்னை நேரில் வந்து பார்ப்பார்கள். வெளியில் செல்லும்போது தீவிர ரசிகர் என என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.
இதையும் படிங்க: நடிகை வேதிகாவின் Fear படம் ஓடிடியில் வெளியீடு.. கிரைம் திரில்லரில் அதிரவைக்கும் காட்சிகள்.!
பணம் கேட்டால் நம்ப வேண்டாம்
இது சாதாரண விஷயம் தான். ஆனால், எனது புகைப்படத்தை வைத்துக்கொண்டு சொந்தக்காரர், மிகவும் வேண்டியவர் என யாரேனும் உங்களிடம் பணத்திற்காக அணுகினால் கவனமாக இருங்கள். என்னுடன் எப்போதோ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி நடப்பதாக தெரியவருகிறது. கவனமாக இருங்கள்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பழனி வரும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்; பாதையாத்திரை பாடல் நாளை வெளியீடு.!