ARTICLE AD BOX
கோவை: கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டிற்கு டங்ஸ்டன் கனிமம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனாலும் மேலூர் பகுதியில் சமணர் படுகை, விவசாய விளைநிலம், பெரியாறு பாசனம் ஆகியவை உள்ளதால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. நம்முடைய முதல்வர் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் காலம் தொடங்கி உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது ஒரு முக்கியமான மகிழ்ச்சியான தகவல். ஒவ்வொரு தமிழனும், பெருமைப்படக்கூடிய விஷயம். வரவேற்க வேண்டிய ஒன்றாகும். நாங்கள் பெரியாரின் கொள்கைகளை ஏற்காவிட்டாலும் பெரியாரை நாங்கள் அவமானப்படுத்த போவது இல்லை.
தற்போது சீமான் பயணிக்கும் பாதை என்பது அவரது ஸ்டைல். பெரியாரை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை. அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக நயினார் நாகேந்திரன் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கூட்டணி என்பது லாப நஷ்ட கணக்கை வைத்துதான் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சிதான் அமையும். விஜய் பரந்தூர் விமானம் நிலையம் தொடர்பாக ஒரு கருத்தை சொல்லி உள்ளார். அதுபற்றி ஏதாவது சரி செய்ய முடியும் என்றால் மாநில அரசு முயற்சிக்க வேண்டும். பரந்தூர் விமான நிலையம் பணிகளை தற்போது துவக்கினாலும் பணிகளை முடிக்க 10 ஆண்டுகளாக விடும். கோமியம் குறித்து பொது வெளியில் நான் பேச மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post லாப நஷ்ட கணக்கை வைத்தே கூட்டணி: சொல்கிறார் அண்ணாமலை appeared first on Dinakaran.