மச்சான் விராட் நீ இதை மட்டும் செய் போதும்.. யாரை பத்தியும் கவலை இல்ல – அஸ்வின் வேண்டுகோள்

2 days ago
ARTICLE AD BOX

இன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் முக்கியமான போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சிறப்பான முறையில் விளையாடுவார் என ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை வென்றிருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா? என்று மாறி இருக்கிறது.

இந்திய அணியின் பலங்கள்

தற்போது இந்திய அணி யைப் பொருத்தவரை ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை வைத்து விளையாட முடியாதது மட்டுமே கொஞ்சம் பின்னடைவாக இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய பேட்டிங் வரிசையில் எல்லா பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். மேலும் அணியில் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் பேட்டிங் நீளத்தை அதிகரிக்கிறார்கள்.

மேலும் திரும்பி வந்திருக்கும் முகமது சாமி மற்றும் இளைய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா இருவரும் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள். ஒட்டுமொத்தமாக இந்திய அணியை எடுத்து பார்க்கும் பொழுது பாகிஸ்தான் அணியை விட மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இருந்த போதிலும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் என்கின்ற காரணத்தினால் இன்றைய போட்டியில் யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்கின்ற கணிப்பு நடந்தது.

இந்த இருவர்தான் முக்கியம்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “என்னைப் பொறுத்த வரையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் சீனியர் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் முக்கியம் என்று நினைக்கிறேன். ரோகித் சர்மா இன்றைய போட்டியில் வழக்கம் போல அதிரடியான ஒரு துவக்கத்தை கொடுப்பார் என்று தோன்றுகிறது. அவர் கொடுக்கும் அந்த துவக்கம் அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்”

இதையும் படிங்க : ஜடேஜாவுக்கு பதில் அவரா.? ரோகித் மட்டும் இதை செஞ்சா அது நியாயமே இல்லை – ஆகாஷ் சோப்ரா பேட்டி

“அதே சமயத்தில் மச்சான் விராட் நீ உன் பேட்டிங்கை என்ஜாய் செய்து எப்பவும் போல விளையாடு. நீ சிரித்துக்கொண்டே உள்ளே வந்து எப்படி இருப்பாயோ அப்படியே இரு. விராட் கோலி தற்போது தனக்கு இருக்கும் ஒவ்வொரு போட்டியையும் என்ஜாய் செய்துதான் விளையாடுகிறார். எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் அவர் கவலைப்படுவது கிடையாது. தனக்கு கிடைக்கும் எல்லா போட்டியையும் அவர் அனுபவிக்க நினைக்கிறார். அவர் அதே வழியில் செல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

The post மச்சான் விராட் நீ இதை மட்டும் செய் போதும்.. யாரை பத்தியும் கவலை இல்ல – அஸ்வின் வேண்டுகோள் appeared first on SwagsportsTamil.

Read Entire Article