3வது டி20; அயர்லாந்து அணிக்கு 143 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

3 hours ago
ARTICLE AD BOX

Image : @ZimCricketv

ஹராரே,

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் அயர்லாந்தும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வேவும் கைப்பற்றின. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது .

முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. மழை காரணமாக இந்த போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது .

தொடக்கத்தில் தடிவான்சே ரெமானி 7� ரன்களும், பிரையன் பென்னட்� 1 ரன்களும் , வெஸ்லி மாதேவேரே ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர் . தொடர்ந்து வந்த சிக்கந்தர் ராசா அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார் . அவர் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

இறுதியில் ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியில் கிரேக் யங், கரேத் டெலானி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து 143 ரன்கள் இலக்குடன் அயர்லாந்து அணி விளையாடுகிறது.

Read Entire Article