ARTICLE AD BOX
நாக்பூர்: ரஞ்சிக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டி நாக்பூரில் இன்று துவங்கி மார்ச் 2ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் கேரளா – விதர்பா அணிகள் மோதுகின்றன. கேரளா முதல் முறையாக ரஞ்சி இறுதிப் போட்டியில் களம் காணுகிறது. அதேசமயம், ஏற்கனவே இரு முறை சாம்பியன் ஆகியுள்ள விதர்பா, 3வது முறையாக இறுதிப் போட்டியில் மோதுகிறது. விக்கெட் கீப்பர் அக்ஷய் வாத்கர் தலைமையிலான விதர்பா அணி, 9 போட்டிகளில் ஆடி 8ல் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறது.
அந்த அணி ஆடிய ஒரு போட்டி டிராவில் முடிந்தது. விதர்பா அணிக்கு அச்சாணியாக கருண் நாயர் திகழ்கிறார். தவிர, துருவ் ஷோரி, அக்ஷய் கர்னேவர் உள்ளிட்ட வீரர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். சச்சின் பேபி தலைமையிலான கேரளா அணிக்கு முகமது அசாருதீன் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக திகழ்கிறார். தவிர, ரோகன் குன்னம்மல், பாபா அபராஜித், ஜலஜ் சக்சேனா உள்ளிட்ட திறமையான வீரர்கள் கேரள அணியில் உள்ளனர்.
The post ரஞ்சி இறுதிப்போட்டி விதர்பா – கேரளா மோதல் appeared first on Dinakaran.