ARTICLE AD BOX
மக்கானா மிகவும் ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருளாகும். மேலும், மக்கானா தாமரை பூவில் இருந்து கிடைப்பதால் இதனை தாமரை விதைகள், ஃபாக்ஸ் நட்ஸ் என அழைக்கப்படுகிறது.
மக்கானாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :
தாமரை விதைகள் என அழைக்கப்படும் மக்கானாவில் புரதம், பொட்டாசியம், கால்சியம், ஃபைபர், சோடியம், கார்போஹைட்ரேட்டுகள் ஆகிய பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதையும் படிங்க: பெண்களே.. உஷார்.. பிரா பயன்படுத்தினால் இப்படி எல்லாம் நடக்குமா.?!
மக்கானாவை அளவாக சிற்றுண்டியில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், எலும்புகள் வலிமை பெறும். குறிப்பாக , உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் மக்கானாவை சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த மக்கானாவில் சில ஆபத்துகளும் உள்ளது. இதனை, சரியாக மென்று சாப்பிடாவிட்டால் செரிமான கோளாறுகள், வாயு தொல்லை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும், மக்கானாவை ஒரு நாளைக்கு 28 கிராம் என அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
ஆகையால், மக்கானாவை சாப்பிடுவதற்கு முன் தங்கள் குடும்ப நல மருத்துவரிடம் ஆலோசனை பொறுவது மிகவும் அவசியம்.
இதையும் படிங்க: இறப்பு வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன் தெரியுமா.?! இதில் இப்படி ஒரு சங்கதி இருக்கிறதா.?!