மகா கும்பமேளாவை முன்னிட்டு ரெயில் சேவை ரத்து - தெற்கு ரெயில்வே

3 days ago
ARTICLE AD BOX

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கோயம்புத்தூரில் இருந்து காலை 7.50 மணிக்கு தன்பாத் செல்லும் வாராந்திர ரெயில் (எண் 03680) வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா மாநிலம் சாந்த்ரகாச்சியில் இருந்து மாலை 5.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22807) வருகிற பிப்ரவரி 27ம் தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் மறு மார்க்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 8.15 மணிக்கு சாந்த்ரகாச்சி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 22808) வருகிற பிப்ரவரி 27ம் தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்படு்ள்ளது.


Read Entire Article