உ.பி. | குடிபோதையில் மாலையை மாற்றிப்போட்ட மணமகன்... அதிரடியாக மணமகள் எடுத்த முடிவு!

2 hours ago
ARTICLE AD BOX
Published on: 
25 Feb 2025, 7:10 am

உத்தரப்பிரதேசத்தில் திருமணத்திற்கு குடிபோதையில் வந்த மணமகன், மணப்பெண்ணுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக அவரது நண்பருக்கு அணிவித்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண். இதனால், மணமகனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

சமீபத்தில் திருமணம் குறித்தான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதுதான் உத்தபிரதேச மாநிலம் பரேலியில் நடந்த சம்பவம் ஒன்று.

கியோல்டியா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படும் இச்சம்பவம், பிப்ரவரி 22 ஆம் தேதி நடந்துள்ளது. பிரமாண்டமாக நடந்த திருமணவிழாவில் மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக்கொள்வதற்காக மேடைக்கு வந்தனர்.

குடிபோதையில் இருந்த மணமகன் மணமகளின் கழுத்தில் மாலை அணிவிப்பதற்கு பதிலாக தனது நண்பர் ஒருவரின் கழுத்தில் மாலை அணிவித்துவிட்டார். இதனால், கோபமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்துமாறு தனது பெற்றோரிடத்தில் கூறியுள்ளார்.

திருமணமும் நிறுத்தப்பட்டது. மேலும், மணமகளின் தந்தை மணமகனின் குடும்பத்தினர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர்கள்மீது வரதட்சனை துன்புறுத்தல் மற்றும் பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

अपनी ही शादी में जमकर शराब पी ली दूल्‍हे राजा ने, नशा इतना हो गया क‍ि दोस्त के गले में वरमाला डाल दी। दूल्हे को देखकर दुल्हन ने शादी से इनकार कर द‍िया।

इसके बाद दूल्‍हा, उसके घरवाले और पुल‍िस के बीच बातचीत। वीड‍ियो देखि‍ए... pic.twitter.com/WTD2aDvV0W

— Vinay Saxena (@vinaysaxenaj) February 24, 2025
uttar pradesh
கேரளாவை உலுக்கிய கொடூர சம்பவம்! 5 கொலை செய்துவிட்டு சரணடைந்த 23 வயது இளைஞர் - பகீர் பின்னணி!

இந்நிலையில், போலீசார் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அபராதம் விதித்தனர். மணமகன், அவரது தந்தை மற்றும் மூன்று குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

Read Entire Article