இயற்கையான முறையில் சன்ஸ்கிரீனுக்கு மாற்றாக எதைப் பயன்படுத்தலாம்?

3 hours ago
ARTICLE AD BOX

மது சருமத்தினை சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் (UV) நேரடியாக நமது தோலில் ஊடுருவுகிறது. இந்தப் புறஊதா கதிர்கள் UVA மற்றும் UVB கதிர்களாகப் பிரிக்கப்படுகிறது. UVA கதிர்கள் சருமத்தில் ஆழமாக ஊடுருவி  நீண்டகால சேதத்தையும் ஏற்படுத்தி வயதான தோற்றத்தை அளிக்கிறது. UVB கதிர்கள்  சருமத்தின் மெலனினை பாதித்து தோலினை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக வயதான தோற்றம், திட்டு திட்டாக கருமையான நிறம், சில நேரங்களில் சரும புற்றுநோய் ஏற்படக் கூட காரணமாக உள்ளது.

பெரும்பாலான மக்கள் சூரியனின் புறஊதா கதிர்களின் தாக்குதலால் நடைபெறும் சரும நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள சன்ஸ்கிரீனைப் பயன்படுத்து கிறார்கள். சருமப் பாதுகாப்பிற்கு சன்ஸ்கிரீன் நல்ல பலனைத் தரும். தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கும். ஆனால் , சன்ஸ்கிரினில் உள்ள சில ​​ரசாயனப் பொருட்கள் சருமத்தின் உணர்திறனை பாதிக்கிறது. பக்க விளைவாக சில சரும நோய்களையும் உண்டாக்குகிறது. பலரும் சருமத்தை ரசாயனப் பொருட்கள் இன்றி பாதுகாக்க விரும்புகின்றனர். இரசாயன கலப்பின்றி இயற்கையான சில பொருட்களை வைத்து சன்ஸ்கீரினிற்கு மாற்றாக பயன்படுத்தி சருமத்தினை பாதுகாக்கும் முறையினை இங்கு காண்போம்.

கற்றாழை சாறு:

இயற்கையான சன்ஸ்கிரினில் சோத்துக் கற்றாழை சாறு முதன்மையானது. பல அழகு சாதனப்பொருட்களில் கற்றாழைசாறு சேர்க்கப்படுகிறது. கற்றாழையை நன்கு கழுவி விட்டு அதில் உள்ள ஜெல் போன்ற கலவையை முகத்தில் கைகளில் பூசிக் கொள்ளலாம். பூசிய சில நொடிகளில் சருமத்தில் ஊடுருவி விடுவதால் சருமத்தில் ஒட்டும் தன்மை இருக்காது. இது புறஊதாக் கதிர்களில் இருந்து உங்களது சருமத்தினை பாதுகாக்கும். விட்டமின் ஈ நிறைந்த கற்றாழைசாறு எப்போதும் உங்கள் சருமத்தினை ஈரப்பதமாக வைத்திருக்கும். 

இதையும் படியுங்கள்:
பாதங்களை பாதுகாக்க பார்லருக்கு போறீங்களா? எதுக்குங்க? பணத்தை சேமிக்கலாமே...
 natural sunscreen alternatives

எண்ணெய்கள்:

தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், கேரட்விதை எண்ணெய், ராஸ்பெரி விதை எண்ணெய்,  ஷியா வெண்ணெய் ஆகியவை  இயற்கையாகவே சருமத்தை பாதுகாக்கும் பண்புகள் நிறைந்தவை. இவற்றில் அதிகளவு விட்டமின் ஈ நிறைந்து இருப்பதால் சருமத்தின் நிறத்தை தக்க வைக்கிறது. மெலனின் உற்பத்தியை தூண்டி விடுவதோடு ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது. சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் பாரம்பரிய முறை இது. இது சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பும் வழங்குகிறது. முகத்தில் உள்ள மாசு, மங்குக்களை நீக்கி சரும அழகினை மேம்படுத்துகிறது.

மஞ்சள் பூச்சு:

மஞ்சள் பூச்சு சருமத்தை சூரிய கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும் நீண்ட கால பாரன்பரியாகும். மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. வெயிலினால் ஏற்படும் சரும நோய்களையும் இது குணப்படுத்துகிறது.

கருப்பு குடை:

குடை மழையிலிருந்து மட்டுமல்ல வெயிலிருந்தும் உங்களை காக்கிறது. இது மற்ற மூலிகைபோல இல்லாமல் செயற்கையான பொருளாக இருந்தாலும் சருமத்தை சூரிய கதிர்களிடமிருந்து முழுமையாக பாதுகாப்பவை. கருப்பு வண்ணம் சூரிய கதிர்களை ஈர்த்துக் கொண்டு அதை மனிதர்களுக்கு கடத்தாமல் தடுக்கின்றன. முகத்திற்கும் நிழல் தருவதால் சருமம் வறண்டுவிடாமல் பாதுகாக்கிறது.

Read Entire Article