மகளைத் தாக்கிய தந்தை! காப்பாற்ற முயன்ற பாட்டி அடித்துக்கொலை!

3 hours ago
ARTICLE AD BOX

உத்தரப் பிரதேசத்தில் பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி தனது மகனால் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

ஷாஜஹான்பூர் மாவட்டத்திலுள்ள சத்வா புஜூர்க் கிராமத்தைச் சேர்ந்த சத்யேந்திரா என்ற நபர், நேற்று (பிப்.23) இரவு தனது 13 வயது மகளை அடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த தாக்குதலிலிருந்து தனது பேத்தியைக் காப்பாற்ற அவரது பாட்டியும், சத்யேந்திராவின் தாயுமான மித்னா தேவி (வயது 75) என்ற மூதாட்டி முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்யேந்திரா, மித்னா தேவியை தடியால் அடித்து தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதையும் படிக்க: தில்லி பேரவை இடைக்காலத் தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி பதவியேற்பு!

இந்நிலையில், தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த அம்மாநில காவல் துறையினர் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளி சத்யேந்திராவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, சத்யேந்திரா மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படும் நிலையில் கொலை அரங்கேறியபோது அவர் போதையில் இருந்தாரா என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Read Entire Article