ARTICLE AD BOX
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் 20 ஓவர்களின் முடிவில் 82 ரண்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட் ஆனது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி லேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் மதியம் 12மணி அளவில் தொடங்கியது.
முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, ரன் குவிக்க முடியாமல் திணறல். 20 ஓவர்கள் முடிவில் ஆல் அவுட் ஆகி 82 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் 23 ரன்களை அடித்தார். இந்திய அணி தரப்பில், வீராங்கனை கொங்காடி த்ரிஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார். அதே நேரம் இந்தியாவின் பருணிகா சிசோடியா, தென்னாப்பிரிக்காவின் சிமோனை கிளின் போல்ட் செய்தார்.
மேலும், பருணிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்பொழுது, 83 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியா இந்திய அணி, கடந்த 2023ல் உலகக்கோப்பையை வென்றது போல் மீண்டும் கோப்பையை கைப்பற்றுமா? என்று இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்து விடும்.