24 வயது இளைஞரின் உயிர் நொடியில் பறிபோன சோகம்.. ஆம்பூரில் துயரம்.. கலங்கவைக்கும் வீடியோ.!

2 hours ago
ARTICLE AD BOX


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குளிதிகை பகுதியில், கோதண்டராமன் என்பவருக்கு சொந்தமாக கார் கேரேஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கேரேஜில் குடியாத்தம், தாங்கல் பகுதியில் வசித்து வரம் சுதாகர் (24) என்பவர், மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். 

இவர் நேற்று தனது கடைக்கு வந்திருந்த காரை சுத்தம் செய்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். காரை நீர் கொண்டு கழுவ முற்பட்டபோது, திடீரென அவரை மின்சாரம் தாக்கி இருக்கிறது.

ஆம்பூர்: கார் பழுது பார்க்கும் சென்டரில் கார் வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்த சுதாகர் (24) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்#Waterwash #Ambur #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/Z6y8VITv4e

— News18 Tamil Nadu (@News18TamilNadu) February 1, 2025

இதையும் படிங்க: சிவகங்கை: ஓடஓட விரட்டி பயங்கரம்.. அரசு மருத்துவமனை வளாகம் அருகே இளைஞர் படுகொலை.!

இதனால் நிலைகுலைந்த சுதாகர் தடுமாறி விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தார். இந்த சமப்வத்தில் அவருடன் பணியாற்றியவர் விரைந்து வந்து சுதாகரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

ஆனால், அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. அவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது தடுமாறி விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டு பலியானாரா? என விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: பொங்கலுக்கு புதுத்துணி எங்கே? விரக்தியில் புதுமணப்பெண் தற்கொலை.. துக்கத்தில் கணவரும் விபரீதம்.!

Read Entire Article