ARTICLE AD BOX
இந்தியாவில் சாகசம், அமைதி மற்றும் கண்டுபிடிப்பை தேடும் தனி பெண் பயணிகளுக்கு ஏற்ற இயற்கை அழகு நிறைந்த பல இடங்கள் இந்தியாவில் இருக்கின்றன. பாதுகாப்பு என்பது முக்கிய அம்சமாக இருப்பதால் சில இடங்கள் அதனுடைய வரலாறு, வளமான கலாச்சாரம் காரணமாக தனித்து நிற்கின்றன. அத்தகைய தனி பெண் பயணிகளுக்கு ஏற்ற பாதுகாப்பாக இருக்கும் 5 இடங்கள் குறித்து இப்பதிவில் காண்போம் .
இமாச்சல பிரதேசத்தின் மெக்லியோட் கஞ்ச்
இமாச்சலப் பிரதேசத்தின் தர்மஷாலா பகுதியில் அமைந்துள்ள "லிட்டில் லாசா" என்ற மெக்லியோட்கஞ்ச் இடம் தலாய்லாமா மற்றும் திபெத்திய கலாச்சார செல்வாக்கின் காரணமாக அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதால் அமைதி மற்றும் ஆன்மீகத்தை தேடும் தனி பெண் பயணிகளுக்கு இந்த நகரம் புகலிடமாக உள்ளது. பனி மூடிய தௌலதார் மலைத்தொடரின்அழகிய காட்சிகளையும், தனி மலையேற்றம் மற்றும் தீபெத்திய சந்தைகள் மற்றும் ஆன்மீக மையங்கள் இருப்பதால் மெக்லியோட்கஞ்ச் சிறந்த இடமாகும்.
ரிஷிகேஷ்
உலகின் யோகா தலைநகராக விளங்கக்கூடிய உத்தரகண்டின் ரிஷிகேசில் அமைந்துள்ள அமைதியான கங்கை நதிக்கரைகள், ஆசிரமங்கள், கோவில்கள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஏற்ற சாகச இடங்கள் நிறைந்த கலவையாக இருக்கிறது. ரிஷிகேஷ் வெள்ளை நீர் ராஃப்டிங், மலையேற்றம் மற்றும் பங்கீ ஜம்பிங் போன்ற செயல்பாடுகளுக்கு ஒரு ஹாட்ஸ்பாட் ஆக இருப்பதோடு விருந்தினர் மாளிகைகள், யோகா மையங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றின் வலுவான வலையமைப்பைக் கொண்டுள்ளது, பெண்கள் மட்டும் தங்கும் விடுதிகள் இருப்பதால், தனியாகப் பயணிக்கும் பயணிகளுக்கு யோகா, சுய சிந்தனை அல்லது சாகசப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு பாதுகாப்பான, வசதியான இடமாக உள்ளது.
கர்நாடகாவின் ஹம்பி
உலக பாரம்பரிய தலமாகவும், பழங்கால கோயில்கள் மற்றும் மாய நிலப் பரப்புகளுக்கு பெயர் பெற்றதும், ஒரு காலத்தில் விஜயநகர பேரரசின் தலைநகராக இருந்த கர்நாடகாவின் ஹம்பி, வரலாற்று ஆர்வலர்களுக்கும் இயற்கையை ரசிப்பவர்களுக்கும் தனியாக பயணிக்கும் பெண் பயணிகள் கவலை இல்லாமல் பயணிக்கும் இடங்களில் ஒன்றாக உள்ளது.
நேர்த்தியான சிற்பங்களோடு உயர்ந்த கோவில்களுடன் கூடிய ஹம்பியின் இடிபாடுகள் அற்புதமான பின்னணியை வழங்குவதால் ஆன்மீக தனிமையின் சரியான கலவையை வழங்குகிறது.
கர்நாடகாவின் கோகர்ணா
கர்நாடகாவில் அமைந்துள்ள கோகர்ணா அழகான கடற்கரைகளுக்கு பெயர் பெற்ற இடமாக இருப்பதோடு, பழங்கால கோவில்கள் மற்றும் மலையேற்றத்திற்கு பெயர் பெற்றதாக விளங்குகிறது. அதிக கூட்டம் இல்லாத அமைதியான கடற்கரையை கண்டு ரசிக்கும் அனுபவத்தை வழங்குவதோடு விருந்தினர் மாளிகைகள் ஏராளம் இருப்பதால் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஏற்ற பாதுகாப்பான இடமாக உள்ளது.
கேரளாவின் மூணார்
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கேரளாவின் மூணார் பசுமையான தேயிலை தோட்டங்கள் ,குளிர்ந்த காலநிலை பிரமிக்க வைக்கும், இயற்கை காட்சிகள் தனியான நடை பயணங்கள், மற்றும் குறுகிய மலை ஏற்றங்களுக்கு சிறந்த இடமாக இருப்பதால் சலசலப்பில் இருந்து தப்பிக்க விரும்பும் பெண்களுக்கு இதுஅழகான இடம் . இந்தப் பகுதி தங்குமிடங்களுக்கு பெயர் பெற்றதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதால் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவத்தை உறுதி செய்கிறது.
மேற்கூறிய 5 இடங்களும் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பாதுகாப்பு உணர்வை கொடுப்பதோடு அவர்களை புத்துணர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதில் சற்றும் ஐயமே இல்லை.