ARTICLE AD BOX
பெண்களுக்கு உடல் சார்ந்த கவலைகள், ஆண்களை விட அதிகமாகவே இருக்கும். ஆனால், பெண்களுக்கு மனம் சார்ந்த கவலைகள் என்பது மிகக் குறைவாகவே ஏற்படும். அதிலும், அழகு சம்பந்தமாக பெண்களுக்கு இருக்கும் கவலைகள் இருக்கின்றதே! யப்ப்பா..!
அளவிட முடியாத அளவிற்கு அவர்கள், தங்களுடைய அழகினை நினைத்து கவலைப்படுவர். அவர்களுடைய அழகினை எப்படி சீர்படுத்துவது, எவ்வாறு மெயின்டெய்ன் செய்வது எனப் பேசாத பெண்களேக் கிடையாது. இருபது வயது குமரி முதல் அறுபது வயது பெரியவர் வரை, அனைவருக்கும் இந்த அழகுப் பிரச்சனை உள்ளது.
பெண்களில் பெரும்பாலானோருக்கு, இயற்கையாகவே தொங்கும் மார்பகங்கள் அமைந்துவிடுகின்றன. குடும்ப ஜீன், போதிய சத்திலில்லாத உணவு மற்றும் கவலையின் காரணமாக பெண்களுடைய மார்பகங்கள் தொங்கி விடுகின்றன. சரி இது இயற்கையாகவே அமைந்தது என்றால், ஒரு சிலருக்கு தொங்காமல், விறைப்பாக இருக்கும் மார்பகங்களும், வயதாக ஆரம்பித்ததும், தளர்வடைய ஆரம்பித்து தொங்கிவிடும்.
இதற்குப் பலக் காரணங்கள் உள்ளன. அவைகளில், மார்பகங்கள் பெரிதாக இருப்பதும் ஒரு காரணம். பெரிய அளவில் மார்பகங்களை உடையவர்களுக்கு, நாளடைவில் அது தளர்ந்து தொங்க ஆரம்பித்து விடும். இவைகளைக் கீழ் காணும் செயல்களை, தொடர்ச்சியாக செய்யும் பொழுது, மார்பகங்கள் தளர்வடைவது நீங்கி, புத்துணர்ச்சியுடன் மீண்டும் விறைப்புத் தன்மையை அடையும்.
மசாஜ்
மசாஜ் என்றதும், வேறு இடங்களுக்குச் சென்று, பணம் செலவழிக்க வேண்டுமோ என, கவலைப் பட வேண்டாம். நீங்களே உங்கள் வீட்டில் செய்யலாம். அதிகபட்சம் பத்து ரூபாய்க்கு மேல் செலவாகாது. ஐஸ் கட்டியினை வாங்கிக் கொள்ளுங்கள். அதனை, மேலாடை மற்றும் மார்பகத்தினை மறைக்கும் ஆடைகளை கழற்றிவிட்டு, உங்கள் மார்பகத்தின் மீது வைத்து தேயுங்கள். மெதுவாகம், மென்மையாகவும் செய்யும் பொழுது, மார்பகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தொடர்ந்து இதனை செய்ய மார்பகத்தில் உள்ள திசுக்கள் விரிவடையும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில், மிக மலிவான விலையில் கிடைக்கின்றது. அதனை எடுத்து, மார்பகத்தில் மென்மையாக, வட்ட வடிவத்தில் தேய்க்க வேண்டும். கீழ் நோக்கி செய்யாமல் மேல் நோக்கி மசாஜ் செய்வது போல் எண்ணெய் தேய்க வேண்டும். அவ்வாறு செய்தால், மார்பகத்தின் தசைகள் வலுவடையும். அத்துடன், தொங்கிய நிலையில் இருந்த மார்பகம், கொஞ்சம் கொஞ்சமாக சிக்கென ஆகும்.