ARTICLE AD BOX
கோவை வணிக வளாகம் ஒன்றில் செயல்பட்டு வந்த பியூட்டி பார்லரில் பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொழில் செய்வது இந்தியாவைப் பொறுத்தவரை சட்டவிரோதமான செயலாக கருதப்பட்டுள்ளது. ஆனால், அந்த தொழில் முழுவதுமாக நடக்கவில்லையா என்று கேட்டால் அதுதான் இல்லை. மறைமுகமாக பலரும் இது போன்ற தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மசாஜ் சென்டர், ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர் போன்றவற்றில் பெண்களை வைத்து மறைமுகமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வாட்சப் மற்றும் பேஸ்புக் குழுக்களை பயன்படுத்தி அலுவலக இடமே இல்லாமல் கூட பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கோவை சேரன்மாநகரில் அமைந்துள்ள ஒரு மாலில் செயல்பட்டு வந்த பியூட்டி பார்லரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: போலி படிப்பு சான்றிதழ் தயாரித்து ஹைடெக் விபச்சாரம்; குமரியில் அதிரடி காட்டிய போலீஸ்.!
இந்த தகவலின் பெயரில் மார்ச் 2ம் தேதி காவல்துறையினர் நேரடியாக அங்கு சென்று பரிசோதனை செய்தபோது அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து, காவல்துறையினர் புரோக்கரான 43 வயது பெண்ணை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபர் போலீசாரால் தேடப்பட்டு வரும் நிலையில், கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: நர்சிங் வேலைக்கு வந்த இடத்தில் பெண் காட்டிய நெருக்கம்.. லட்சங்களை இழந்த அஞ்சல் அதிகாரி.!