ARTICLE AD BOX
பிப்ரவரி 26ஆம் தேதி மகா சிவராத்திரி: இந்திய பங்குச் சந்தைகள் செயல்படுமா?
மும்பை: நாடு முழுவதும் பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இதனை ஒட்டி இந்திய பங்குச் சந்தைகள் அன்றைய தினத்தில் செயல்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பங்குச் சந்தைகளை பொருத்தவரை ஆண்டின் தொடக்கத்திலேயே எந்தெந்த பண்டிகைகளுக்கு மற்றும் கொண்டாட்டங்களுக்கு எல்லாம் விடுமுறை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி பார்க்கும்போது மகா சிவராத்திரியான பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தொடர்ந்து மீண்டும் வியாழக்கிழமையான பிப்ரவரி 27ஆம் தேதி தான் இந்திய பங்குச் சந்தைகள் செயல்படும்.

தேசிய பங்குச் சந்தையின் விடுமுறை காலண்டரில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது . இந்துக்களின் பண்டிகையான மகா சிவராத்திரி பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி வருகிறது. பொதுவாகவே ஆண்டுதோறும் மகாசிவராத்திரி அன்று இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும்.
இந்திய பங்குச் சந்தையை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிவு பாதையிலேயே இருந்து வருகிறது. பிப்ரவரி 25ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை அன்று சற்றே ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் பின்னர் சரிவை கண்டது. செவ்வாய்க்கிழமை அன்று காலை சென்செக்ஸ் 74,540 புள்ளிகளில் தொடங்கி அதிகபட்சமாக 74 , 778 புள்ளிகள் வரை வர்த்தகமானது.
செவ்வாய்க்கிழமை காலை 22,529 புள்ளிகளாக தொடங்கிய தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 22,620 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் சரிவடைந்தது. இதனை அடுத்து சரிவை கண்டது. இந்திய பங்குச் சந்தையை பொறுத்தவரை 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 14 நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மகாசிவராத்திரியை தொடர்ந்து ஹோலி பண்டிகையொட்டி மார்ச் 14ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அதே போல மார்ச் 31ஆம் தேதி ஈகை திருநாளையொட்டி பங்குச்சந்தைக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது .ஏப்ரல் மாதத்தில் மூன்று நாட்களுக்கு இந்திய பங்குச் சந்தைகள் செயல்படாது.
ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி, ஏப்ரல் 18ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய நிகழ்வுகளை ஒட்டி பங்குச் சந்தைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதி மகாராஷ்டிரா தினம் கொண்டாடப்படுகிறது, அன்றைய நாளில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதனை தொடர்ந்து சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி ஆகியவற்றுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது.
Story written by: Devika