ARTICLE AD BOX
உலகையே புரட்டிப்போடும் பெண்கள் சக்தி.. தொழில் துறையில் சாதிக்கும் சிங்கப் பெண்கள்..!!
பெண்கள் இன்று உலகின் அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதனை படைத்து, புதிய முன்னுதாரணங்களை உருவாக்கி வருகின்றனர். முன்னனி நிறுவனங்களின் தலைவர்களாகவும், புதிய முயற்சிகளை வெற்றிகரமாக தொடங்குபவர்களாகவும் திகழ்கின்றனர். அவர்கள் கடின உழைப்பால் வெற்றி கண்ட கதைகள், பல பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும்.
ஃகஜால் அலாக் - மாமா எர்த் (Mamaearth) நிறுவனத்தின் இணை நிறுவனர்:வணிக உலகில் புதுமையான சாதனைகள் படைத்த ஒரு முக்கியமான பெண் ஃகஜால் அலாக். மாமா எர்த் (Mamaearth) நிறுவனம் இன்று இந்தியாவின் முன்னணி சொந்த பராமரிப்பு பிராண்டுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மற்றும் ரசாயனமில்லாத (toxin-free) பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஃகஜால் அலாக் தனது கணவர் வருண் அலாக் உடன் இணைந்து 2016ஆம் ஆண்டு மாமா எர்த் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இது இந்தியாவின் முதல் Made Safe சான்றிதழ் பெற்ற பிராண்டு ஆகும். ஆரம்பத்தில் சில சிரமங்களை எதிர்கொண்டாலும், தனது தீர்மானத்தால், சந்தையில் ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி விட்டார். இன்று மாமா எர்த் பல்வேறு சரும பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கிறது.
ரோஷ்னி நாடார் - எச்.சி.எல் (HCL) நிறுவனத்தின் தலைவர்:இந்தியாவின் மிகப்பெரிய ஐடி (IT) நிறுவனங்களில் ஒன்றான HCL Technologies-ன் தலைவராக திகழ்பவர் ரோஷ்னி நாடார். 2020ஆம் ஆண்டு, இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான HCL-ன் முதலாவது மகளிர் தலைவர் ஆனார். இதன்மூலம் இந்தியாவின் முதலாவது தொழில்நுட்ப நிறுவனம் நடத்தும் பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.
அவரது தந்தை ஷிவ் நாடார், HCL நிறுவனத்தை உருவாக்கியவர். ஆனால் ரோஷ்னி, தனது தந்தையின் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, தனது தனிப்பட்ட வழியை உருவாக்க விரும்பினார். HCL நிறுவனத்தை உலகளாவிய அளவில் வளர்ச்சியடையச் செய்வதோடு, சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டவர்.
அவர் "ஷிவ் நாடார் அறக்கட்டளை (Shiv Nadar Foundation)" என்ற நிறுவனத்தின் மூலம் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறார். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்கிறார்.
கிரண் மஜூந்தர்-ஷா - பயோகான் (Biocon) நிறுவனத்தின் நிறுவனர்: இந்தியாவின் மிகப்பெரிய மருந்து மற்றும் உயிரியல் அறிவியல் நிறுவனமான Biocon-ன் நிறுவனர் கிரண் மஜூந்தர்-ஷா. மருந்து தொழிலில் பெண்கள் மிகக் குறைவாக இருந்த காலத்தில், இந்த துறையில் முன் சென்று வழி காட்டியவர்.
1978ஆம் ஆண்டு, தன்னுடைய Biocon நிறுவனத்தை தொடங்கியபோது, அவர் பல சவால்களை எதிர்கொண்டார். அப்போது மருந்து மற்றும் உயிரியல் அறிவியல் தொழிலில் பெண்கள் பெரிதாக ஈடுபடவில்லை. ஆனால் முயற்சி மற்றும் விடாமுயற்சியால், தனது நிறுவனத்தை இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமாக மாற்றினார்.
இன்று Biocon, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவ புறநிலை பராமரிப்பு (biopharmaceuticals) துறையில் உலகளவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. கிரண் மஜூந்தர்-ஷாவின் சாதனை பெண்களுக்கு பெரிய ஊக்கமாக உள்ளது.
பால்குனி நாயர் - நைக்கா (Nykaa) நிறுவனர்:ஒரு சிறிய முயற்சியால் இந்தியாவின் மிகப்பெரிய அழகு மற்றும் உடை அணிவகுப்பு (beauty & fashion) தொழிலாக மாற்றிய ஒரு முக்கியமான தொழில் முனைவோர் பால்குனி நாயர். 2012ஆம் ஆண்டு, Nykaa நிறுவத்தை தொடங்கிய போது, இந்தியாவில் ஆன்லைன் அழகு மற்றும் ஆடை விற்பனை பெரிதாக இல்லை. ஆனால், பல்வேறு பிராண்டுகளின் அழகு பொருட்களை ஒரே இடத்தில் கிடைக்கச் செய்து ஒரு நம்பகமான சந்தையாக Nykaa-வை உருவாக்கினார்.
நைக்கா இன்று இணையவழி மற்றும் ஷோரூம் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. 2021ஆம் ஆண்டு Nykaa பங்குச் சந்தையில் (Stock Market) பட்டியலிடப்பட்ட போது, பால்குனி நாயர் இந்தியாவின் மிகப் பணக்கார பெண்மணிகளில் ஒருவராக உயர்ந்தார். பெண்கள் தொழில் தொடங்கலாம், வளரலாம், வெற்றி பெறலாம் என்பதற்கான ஒரு பெரிய எடுத்துக்காட்டு இவர்தான்.
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் எந்த ஒரு துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு ஃகஜால் அலாக், ரோஷ்னி நாடார், கிரண் மஜூந்தர்-ஷா, பால்குனி நாயர் போன்ற பெண்களின் கதைகள் சிறந்த உதாரணங்களாக உள்ளன. இவர்கள் தங்கள் முயற்சி, புத்திசாலித்தனம், கடின உழைப்பு ஆகியவற்றால் இந்திய வணிக உலகில் முன்னணியில் உள்ளனர். இவர்களைப் போல் பலரும் நம் நாட்டில் சாதித்துக் கொண்டு தான் வருகின்றனர்.
மேலும் பல பெண்களுக்கு தொழில்முனைவோர் (Entrepreneurs) ஆக பயணிக்க ஒரு பெரிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இன்று தொடங்கும் ஒரு சாதாரண முயற்சி நாளைய பெரிய தொழிலாக வளரக்கூடும். உங்கள் கனவுகளையும் நனவாக்குங்கள்..