ARTICLE AD BOX
தமிழ்நாட்டிலும் ஆயிரக்கணக்கான நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பரவலாக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி, திருவானைக்கோவில் கிராமத்தில் 3 தலைமுறைகளாக ‘கப்பக்கார்’ என்ற நெல் ரகத்தை புழுதி முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். இது 150 நாள்கள் வயதுடையது. இதுபோன்று ஒவ்வொரு வட்டாரத்துக்கும் உரிய நெல் ரகங்கள் இருந்து வந்திருக்கின்றன.

அத்தகைய நெல் ரகங்கள் குறித்தும் அவற்றின் சிறப்புகள் குறித்தும் பசுமை விகடன் மற்றும் இந்தியப் பாரம்பரிய அறிவியல் நிலையம்(CIKS) இணைந்து வழங்கும் 'லாபம் கொடுக்கும் பாரம்பர்ய நெல் சாகுபடி' என்ற பயிற்சியில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பயிற்சி சி.ஐ.கே.எஸ்(CIKS) என்றழைக்கப்படும் இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையத்தின் பயிற்சி பண்ணையில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி பண்ணை செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் அடுத்த சுக்கன்கொல்லையில் உள்ளது.
இந்திய பாரம்பரிய அறிவியல் மையம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2000-ம் ஆண்டிலிருந்து இந்தப் பண்ணையில் பாரம்பர்ய நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாரம்பர்ய இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டும், பாரம்பர்ய நெல் ரகங்களை பாதுகாக்கும் பொருட்டும் இப்பண்ணை செயல்பட்டு வருகிறது. அழிந்து வரும் பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை சந்தைப்படுத்துவதற்கும் பெரிய அளவில் உதவி வருகிறது.
2016-ம் ஆண்டு ‘நம்ம நெல்லு’ என்ற திட்டத்தை தொடங்கி, அதன் மூலம் பாரம்பர்ய நெல்லை வகைப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் வருகிறது. மேலும் விதை நெல்லை உற்பத்தி செய்தல், அதை விவசாயிகளிடையே கொண்டு சேர்த்தல், அதிலுள்ள ஊட்டச்சத்து பண்புகளை அறிதல் போன்றவற்றையும் செயல்படுத்தி வருகிறது.

இந்தப் பண்ணையில் 150-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய நெல் வகைகளை பாதுகாத்து வருகிறது. பாரம்பர்ய நெல்லின் அவசியத்தை பற்றியும், 30 வருடங்களாக இந்த மையம் ஆவணப்படுத்திய செய்திகளையும் ‘தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்கள், ஒரு தகவல் களஞ்சியம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.
2025, மார்ச் 2-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இந்த நேரடி ஒரு நாள் பயிற்சியில், பாரம்பரிய நெல் ரகங்களில், அதிக மகசூல் பெறுவது எப்படி, இவற்றை மதிப்புக்கூட்டும் மற்றும் வணிக ரீதியாக சாகுபடி செய்வதற்கான முறை போன்ற பல விஷயங்களை இந்திய பாரம்பரிய அறிவியல் மைய பயிற்சியாளர்கள் கருத்துரை மற்றும் செயல் விளக்கம் அளிக்க இருக்கிறார்கள்.

முன்பதிவுக்கு:
https://events.vikatan.com/486-paddy-cultivation-training/
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம்: பயிற்சி மையம் , இந்திய பாரம்பரிய அறிவியல் மையம், சுக்கன்கொல்லை( வேடந்தாங்கல் அருகில்), மதுராந்தகம் தாலுக்கா ,செங்கல்பட்டு மாவட்டம்.
(செங்கல்பட்டில் இருந்து பயிற்சி மையத்திற்கு சென்று, வர வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)
பயிற்சி கட்டணம்: 1,200 ரூபாய்/-
(பயிற்சியில் நோட்பேட் , பேனா, தேநீர், சான்றிதழ், மதிய உணவு, ஒரு கிலோ பாரம்பரிய நெல் விதை, 'தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்கள், ஒரு தகவல் களஞ்சியம் 'நூல் ஆகியவை வழங்கப்படும்)
சிறப்பு அம்சங்கள்:
* மண் வகை மற்றும் பருவத்திற்கு ஏற்ற பாரம்பரிய நெல் ரகங்களை தேர்வு செய்வது எப்படி .
* பாரம்பரிய நெல் ரகங்களில் அதிக மகசூல் எடுக்க உதவும் தொழில்நுட்ப முறைகள்.
* பாரம்பரிய அரிசியில் சத்துக்கள் நீங்காமல் உமி நீக்கி அரிசி பிரிக்கும் செயல்முறைகள் நேரடி விளக்கம்.
* வணிக ரீதியாக சாகுபடி செய்வதற்கான பாரம்பரிய நெல் ரகங்கள்.
* பாரம்பரிய அரிசியில் மதிப்புக்கூட்டும் முறைகள்.பாரம்பரிய நெல் ரகங்களை அடையாளம் காணுதல், அதன் தோற்றம், சிறப்புகள்.
* பாரம்பரிய நெல் மற்றும் அரிசியை சந்தைப்படுத்தும் முறைகள்.
* விருக்ஷார்வேதம் என்கிற பாரம்பரிய தாவர அறிவியல் சார்ந்த இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள்.

பயிற்சி கட்டணம் ரூபாய் 1200 /-
https://events.vikatan.com/486-paddy-cultivation-training/ என்ற இணைப்பை கிளிக் செய்து பெயர், வயது, செல்போன், எண், முகவரி ஆகியவற்றை கொடுத்து, கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு : 99400 22128 (வாட்ஸ் அப்)
(நிகழ்ச்சியில் பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும்).