ARTICLE AD BOX
JEE 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான JEE 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. JEE 2-ம்கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதல்கட்ட தேர்வு எழுதியவர்களும் இதில் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்தால், 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
The post கவனம்…! JEE 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.