பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: வழக்கிற்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கோழை என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, பதிலடி கொடுத்தும் வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கோழை என விமர்சித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பேட்டி அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; வழக்கிற்கு பயந்து, மத்திய அரசுக்கு மண்டியிடுவது கோழையா..? மாநில உரிமைக்காக சவால் விடுவது கோழையா..? மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசிற்கு சவால் விடும் முதலமைச்சரை கோழை என்பதா? முதல்வரை கோழை என்பவர்கள், கோழை எனக் கூறுபவர்கள் அந்த சொல்லுக்கு அர்த்தம் தெரியாத நபர்களாக தான் இருக்க முடியும். மாநில உரிமைக்கு குரல் கொடுக்கும் எங்கள் முதல்வர் இரும்பு முதல்வர் என்று கூறியுள்ளார்.

 

The post பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி! appeared first on Dinakaran.

Read Entire Article