ARTICLE AD BOX
தாய்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் போதைப் பொருள் கடத்த முயன்ற இளம்பெண் தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இன்று (பிப்.24) கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப்.21 அன்று தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் தில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இளம்பெண் ஒருவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அப்போது, 8 பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் அரிசி பாக்கெட்டுகளில் 11,284 கிராம் அளவிலான பச்சை நிறமுள்ள பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை, கஞ்சா போன்ற போதைப் பொருளாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டு சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிக்க: உருது முதல் சமஸ்கிருதம் வரை: 6 மொழிகளில் பதவியேற்ற தில்லி எம்எல்ஏக்கள்!
இதனைத் தொடர்ந்து, அதனை ஆய்வுக்கு அனுப்பப்பட்டபோது அது கஞ்சா போன்ற போதைப் பொருள்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த போதைப் பொருளின் மதிப்பானது ரூ.11.28 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தக் கடத்தலில் ஈடுபட்ட உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.