ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த ஐகோர்ட் கிளை!!

2 hours ago
ARTICLE AD BOX

மதுரை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் சாலை மறியல் போராட்டத்துக்கு தடை கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்க 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

The post ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்த ஐகோர்ட் கிளை!! appeared first on Dinakaran.

Read Entire Article