விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல முடியாது! ஏன்?

2 hours ago
ARTICLE AD BOX

வெளிநாடு செல்லும்போது ஏன் தேங்காய் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை, ஆனால், விமானப் பயணத்தின்போது, கையில் வைத்திருக்கும் பையில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதியில்லை.

ஒரு விமானப் பயணி தனது கைப்பையில் கொண்டு செல்லும் உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்லும்போது, தேவையில்லாத கால விரையம் ஏற்படலாம்.

உணவுப் பொருள்களிலேயே கூட, சில பொருள்களை கைப்பையில் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. அதாவது, உடைத்து காயவைத்த கொப்பறை தேங்காயை பையில் வைத்திருக்க அனுமதியில்லை. இதற்குக் காரணம், பாதுகாப்பு மற்றும் விமானப் பயணங்களுக்கான கொள்கைகளும்தான்.

அதாவது, கொப்பறைத் தேங்காயில் அதிகப்படியான எண்ணெய் இருக்கும். இது விமானப் பயணத்தின்போது ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றி எரியும் அபாயம் இருப்பதால், விமானத்தில் கொண்டு செல்லும் எந்த உடைமையிலும் கொப்பறைத் தேங்காய் இருக்கக் கூடாது.

அதுபோல, திரவமாக இருக்கும் உணவுப் பொருள்களையும் கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்றால், அது வெறும் 100 மில்லி லிட்டர் அல்லது அதற்குக் குறைவாக இருக்கலாம். உதாரணமாக குளிர்பானம், சூப், சாஸ், தயிர், மோர், பீனட் பட்டர் போன்ற எதையும் 100 மி.லி.க்கு மேல் கொண்டுச் செல்ல அனுமதியில்லை.

அது மட்டுமல்ல, பழம் மற்றும் காய்கறிகளையும் கூட உடைமைகளை ஏற்றக் கூடாது. ஒரு வேளை அது வழியில் நசுங்கி, உங்கள் பை ஈரமாகி, அது இருக்கும் இடத்தையும் நாசமாக்க வாய்ப்பிருப்பதால், அனுமதி மறுக்கப்படுகிறது.

அதிக மணம் வீசும் உணவுகளுக்கும் தடைதான். பூண்டு, சில சீஸ் வகைகள் போன்றவை கசிந்து, விமானத்தில் இருக்கும் சக பயணிகளுக்கும் பிரச்னையை ஏற்படுத்தலாம்.

உங்களுக்கு 'பி' ரத்த வகையா? ஆராய்ச்சியில் வெளியான முக்கிய தகவல்!

பால் பொருள்கள், இறைச்சி, கடல் உணவு போன்றவையும் விமானப் பயணத்தின்போது ஏற்றதல்ல. குறிப்பாக கைப்பையில் வைத்திருக்க ஏற்றதல்ல. இது திடீரென ஏற்படும் வெப்பத்தில் கெட்டுப்போவதோடு, சாப்பிடுவதால் உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே, இதற்கும் தடைதான்.

இதுபோல பல பொருள்களுக்குத் தடைகள், கட்டுப்பாடுகள் இருப்பதால், விமானப் பயணத்தின்போது இது பற்றி முழுமையாக அறிந்துகொள்வது நல்லது.

Read Entire Article