ARTICLE AD BOX
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நேற்று புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும்.
இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று கராச்சியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 2:30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் 2-வது போட்டியில் குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ள இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன.
ஃபகார் ஜமான் விலகல் - பாகிஸ்தானுக்கு பின்னடைவு
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தி வரும் பாகிஸ்தான் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் முன்னணி வீரரான ஃபகார் ஜமான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து விலகியுள்ளார். கராச்சியில் நியூசிலாந்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்யும் போது, ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஜமானுக்கு காயம் ஏற்பட்டது.
நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் ஷாஹீன் அப்ரிடி வீசிய பந்தை கவர்ஸ் திசையில் விரட்டினார். அந்தப் பந்தை பிடிக்க ஃபகார் ஜமான் விரைந்தார். பிறகு, பாபர் அசாமிடம் பந்தை மீண்டும் கீப்பரிடம் வீசுவதை நிறுத்திக் கொண்டார். அப்போது அவர் அசௌகரியத்தை உணர்ந்தார். மேலும், அவர் தான் வெளியேற வேண்டும் என அழைத்த நிலையில், பிசியோவுடன் களத்தை விட்டு வெளியேறினார், இருப்பினும், அவர் யாரின் உதவியின்றி இன்றியும் டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி), "ஃபக்கர் ஜமான் தசை சுளுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு பரிசோதிக்கப்படுகிறார், மேலும், இது குறித்த அறிவிப்பு சரியான நேரத்தில் வழங்கப்படும்."
காயம் குறித்து ஃபகார் ஜமான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “மிகப்பெரிய அரங்கில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாகும். பாகிஸ்தானை பெருமையுடன் பலமுறை பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக நான் இப்போது ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் இருந்து வெளியேறிவிட்டேன், ஆனால் நிச்சயமாக இறைவன் சிறந்த திட்டமிடுபவர். வாய்ப்புக்கு நன்றி. நான் எங்களது வீரர்களை வீட்டில் இருந்தபடி ஆதரிப்பேன். இது வெறும் ஆரம்பம் மட்டுமே, பின்னடைவை விட மறுபிரவேசம் வலுவாக இருக்கும்." என்று அவர் கூறியுள்ளார்.
ஃபகார் ஜமான் பாகிஸ்தான் அணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக இமாம்-உல்-ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 34 வயதான ஃபகார் ஜமான் 4-வது இடத்தில் பேட்டிங் ஆடிய நிலையில், அவர் ரன் சேர்க்க போராடி இருந்தார். 41 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) துபாயில் அரங்கேற உள்ளது.