பரமு கல்யாணத்தில் நடந்த சண்டை… மீனாவுக்கு விழுந்த அடி… அடுத்த பரபரப்பு!

5 hours ago
ARTICLE AD BOX

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை நிகழ்ச்சியில் இன்றைய எபிசோட்டில் நடக்க இருக்கும் பரபரப்பு குறித்த தொகுப்புகள்.

மீனாவை அந்த இரண்டு குடிக்காரர் முன் நிறுத்தி முத்து நான் குடிக்கவில்லை என்பதை நிரூபித்து விடுகிறார். உடனே மீனாவிடம் யாரோ சொன்னதை நம்பிட்டேன் எனப் பேச யார் நான் குடித்தேன் எனக் கூறினார்கள் எனக் கேட்கிறார். 

ரவி தனக்கு அண்ணி தான் சொன்னார் எனக் கூற மீனாவிடம் கேட்கிறார் முத்து. அவர் உங்க அண்ணன் அத்தையிடம் சொல்லி அவர்கள் தான் மாமாவிடம் சொன்னதாக கூறுகிறார். உடனே கடுப்பாகும் முத்து, மனோஜிடம் போகிறார். அவர் போட்டோ எடுத்து கொண்டு இருக்கும் போது அதை பிடிங்கி விடுகிறார்.

நான் குடித்ததை நீ பார்த்தியா எனக் கேட்க பாட்டிலுடன் பார்த்தேன் என்கிறார். அப்போ குடிச்சேனா என முத்து போனை பிடிங்கி கொண்டு போக மனோஜ் துரத்தி போகிறார். தொடர்ந்து மன்னிப்பு கேட்க சொல்ல மனோஜ் முடியாது எனக் கூற முத்து போக பார்க்க அவர் கையில் இருந்த போனை பிடிங்கி மீனா கொடுத்து விடுகிறார். 

Also Read: யாருக்கும் செய்யாததை ரஜினி எங்களுக்காக செய்தார்!.. ஃபீல் பண்ணி பேசும் பிரித்திவிராஜ்!..

வெளியில் செல்லும் போது அவர் கையில் இருந்து கத்தி விழ மீனா பார்த்து விடுகிறார். அவரிடம் கேட்க காரணம் சொல்ல சமாளிக்கிறார். மீனா எல்லாரையும் அனுப்பி கதவை சாத்திவிடுகிறார். கொஞ்ச நேரம் கழித்து முத்துவிடமும் இதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

siragadikka aasai

அந்த நகை திருடி கதவை திறந்து நகைகளை திருடி செல்கிறார். வாசலில் இருந்து மீனா பார்த்து முத்துவிடம் சொல்லி அழைத்து வர இருவரும் ஆட்டோவில் தப்பிக்க பார்க்கிறார்கள். அவர்களை மடக்கி பிடித்து முத்து கையில் இருந்ததை பிடிங்கி விடுகிறார். அவர்கள் தப்பிக்கும் போது மீனாவின் கையில் குத்திவிடுகின்றனர்.

மண்டபத்தில் இருந்து ஆட்கள் வந்த போது ஓடிவிடுகின்றனர். பரமுவிடம் பார்க்க சொல்ல தன் மகள் பவானி நகை என்கிறார். எல்லாரும் மண்டபத்துக்கு போக பரமு கறிக்கடைக்காரர் மணியிடம் இந்த விஷயத்தை சொல்ல அவர் மேளதாளத்துடன் மாலையுடன் வருகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Read Entire Article