ARTICLE AD BOX

எம்ஜிஆர் பற்றி எவ்வளவோ பல விஷயங்களை நாம் கேட்டு தெரிந்திருக்கிறோம். எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் தன் இயல்பிலிருந்து என்றைக்கும் மாறாத ஒரு நல்ல மனிதராகத்தான் எம்ஜிஆர் வாழ்ந்திருக்கிறார். இந்த நிலையில் எம்ஜிஆர் பற்றி இன்னொரு சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. எல்லாருக்கும் நடிகர் ராஜேஷை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கே.கே. நகரில் ஒரு வீடு கட்டிய ராஜேஷ் அந்த வீடு கிரஹப்பிரவேஷத்திற்கு எம்ஜிஆரை அழைக்க நினைத்தார்.
உடனே எம்ஜிஆரின் உதவியாளரை தொடர்பு கொண்டு அவரை பார்க்க அனுமதியும் வாங்கிவிட்டார் ராஜேஷ். தன் மனைவியுடன் ராஜேஷ் எம்ஜிஆர் வீட்டிற்கு செல்ல கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்துதான் ராஜேஷை உள்ளே வரச்சொன்னாராம் எம்ஜிஆர். உள்ளே போனதும் தான் கொண்டு வந்திருந்த அழைப்பிதழை கொடுத்து கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ராஜேஷ்.
அந்த கிரஹப்பிரவேஷ நாளும் வர அதே நாளில் பிரபல பழம்பெரும் நடிகை எஸ்.டி. ராஜலட்சுமியின் மரணச்செய்தியும் வந்திருக்கிறது. அந்த நேரத்தில் எம்ஜிஆர்தான் முதலமைச்சர் . எஸ்.டி .ராஜலட்சுமி எம்ஜிஆரின் பல படங்களில் சேர்ந்து நடித்தவர். ஒரு முதலமைச்சராக இருந்து தன்னுடைய சக நடிகரின் துக்க நிகழ்விற்கு கண்டிப்பாக எம்ஜிஆர் போக வேண்டும். இன்னொரு பக்கம் கிரஹப்பிரவேஷம். அதற்கும் சென்றாக வேண்டும்.
ராஜேஷுக்கு ஒரே பதற்றம். எஸ்.டி. ராஜலட்சுமிக்கு இரங்கல் தெரிவிக்க எம்ஜிஆர் போய்விட்டால் கிரஹப்பிரவேசத்திற்கு வரமாட்டாரே என புலம்பிக் கொண்டிருந்தாராம். உடனே எம்ஜிஆர் ஒரு முடிவு எடுத்தார். ஒரு பக்கம் துக்க காரியம். இன்னொரு பக்கம் நல்ல காரியம். துக்க காரியத்துக்கு சென்று நல்ல காரியத்துக்கு போனால் அது சரி வராது. ஆகையால் எம்ஜிஆர் முதலில் கிரஹப்பிரவேஷத்திற்கு சென்று விட்டாராம்.

rajesh
போனதும் ராஜேஷை பார்த்து நான் வரமாட்டேனு நினைத்தீயோ என்று கேட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அன்று ராஜேஷை இரண்டு மணி நேரம் காக்க வைத்தார் அல்லவா? அதற்கான காரணத்தையும் கிரஹப்பிரவேஷத்தின் போதுதான் எம்ஜிஆர் கூறினாராம். அன்று ராஜேஷ் அழைப்பிதழை கொண்டு வந்த நாள் சனிக்கிழமை. அதுவும் இரவு 10.30 மணிக்கு. 9 மணியிலிருந்து 10.30 வரைக்கும் ராகுகாலமாம். அதனால் அழைப்பிதழை கொண்டு வந்தாலும் அதை வாங்கும் நேரம் நல்ல நேரமாக இருக்க வேண்டும் என நினைத்துதான் 11 மணி வரை காக்க வைத்து வாங்கியிருக்கிறார் எம்ஜிஆர்.