தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிப்பது உண்மையா?!.. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!…

15 hours ago
ARTICLE AD BOX
dhanush

Dhanush Ajith movie: தமிழ் சினிமாவின் ஸ்டைலீஷ் நடிகராக இருப்பவர் அஜித்குமார். சினிமாவில் நடிப்பது அவருக்கு தொழில் என்றாலும் அதுபோக பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, கார் ரேஸில் கலந்துகொள்வது என அவருக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து கொடுத்துவிட்டு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்துகொண்டு வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தை தயாரித்த லைக்காவுக்கு நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், குட் பேட் அக்லி படம் ரசிகர்களை ஏமாற்றாது என்கிறார்கள். ஏனெனில் இது ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கிறது.

good bad ugly

good bad ugly

இப்படத்தின் டீசர் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பில்லா, மங்காத்தா படங்களுக்கு பின் அஜித் ரசிகர்களை 100 சதவீதம் திருப்திப்படுத்தும் படமாக குட் பேட் அக்லி உருவாகியிருக்கிறது. இந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில்தான் தனுஷுன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இட்லி கடை படத்தை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன்தான் இந்த படத்தை தயாரிக்க போவதாகவும் சொல்லப்பட்டது. தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கிவிட்டு இப்போது இட்லி கடை என்கிற படத்தை இயக்கி வருகிறார். தனுஷ் எடுக்கும் படங்களின் ஸ்டைல் வேறு. அஜித் நடிக்கும் படங்களின் ஸ்டைல் வேறு.

good bad ugly

எனவே, அஜித்துக்கு ஏற்றார் போல் கதை, திரைக்கதையை தனுஷ் அமைப்பாரா?.. அஜித் தனுஷின் இயக்கத்தில் நடிப்பாரா? என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஆகாஷ் பாஸ்கரன் ‘தனுஷ் இயக்கத்தில் அஜித் சார் நடிக்கும் படம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில்தான் இருக்கிறது.

இன்னும் எதுவும் உறுதியாகவில்லை’ என சொல்லியிருக்கிறார். தனுஷ் அடுத்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பணிகள் விரைவில் துவங்கும்’ என சொல்லியிருக்கிறார்.

Read Entire Article