HBD Actress Losliya: 'நான் தோத்துப் போனவளா மட்டும் இருக்க கூடாது..' வீம்பாக நிற்கும் நடிகை லாஸ்லியாவின் பிறந்தநாள் இன்று

1 day ago
ARTICLE AD BOX

லாஸ்லியா பேட்டி

இதையடுத்து, அவருக்கு தமிழ் மக்களிடம் மெல்ல மெல்ல ஆதரவு கிடைத்த நிலையில், சில படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் கலாட்டா தமிழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் சென்னை வந்த காரணம், சினிமாவில் ஜெயிக்க நினைத்ததற்கான காரணம், தந்தையின் இழப்பு குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

எனக்கு பெருமை தான்

அந்தப் பேட்டியில், "நான் இலங்கையில இருந்து சென்னை வந்து இத்தனை நாள் திரைத்துறையில் இருப்பதை பார்க்கும் போது எனக்கே என்னைப் பார்த்து பெருமையா இருக்கு. எனக்கு இங்க யாரையும் தெரியாது. யாரோட சப்போர்ட்டும் இல்ல. அப்படி இருந்தும் ஒத்த ஆளா வந்து நின்னு சாதிச்சது பெருமை தான்.

என் சொந்த ஊர் திரிகோணமலை. அங்க இருந்து நான் கொழும்புவுக்கு போறதே ரொம்ப கஷ்டமான விஷயம். அப்படி இருக்கும் போது, நான் படிக்கும் போதே முடிவு பண்ணிட்டேன். நான் யார் கையயும் எதிர் பார்க்காம பெருசா ஏதாவது சாதிக்கணும்ன்னு. அதுனால தான் ரொம்ப கஷ்டப்பட்டு கொழும்புல வேலைக்கு சேர்ந்தேன்.

என்ன மாதிரி பெண்களுக்காக தான்

அப்புறம் வேலைக்கு எந்தே பேக்அப்பும் இல்லாம, நான் செஞ்சிட்டு இருந்த வேலைய விட்டு சென்னை வந்தேன். இங்க நான் தோத்துப்போன ஒருத்தியா இருக்க கூடாதுன்னு மட்டும் முடிவு பண்ணுனேன். அதுக்கான காரணம் என்னென்னா, எங்க ஊர்ல என்ன மாதிரி வெளிய வந்து சாதிக்கணும்ன்னு ஆசைப்படுறவங்களுக்கு நான் தோத்துப்போன உதாரணமா இருந்தா அவங்களாளையும் அவ்வுளவு சீக்கிரம் வெளிய வர முடியாது. அதுனால நான் பெருசா எதுவும் பண்ணலன்னா கூட சின்ன சின்னதா நடிச்சு என்னை நான் காப்பாத்திப்பேன்" என்றார்.

அப்பா இறந்துட்டாரு

பின், தன் அப்பாவைப் பற்றி பேசினார். அப்போது, " எங்க அப்பா எங்களோட இல்லைங்குறத இப்போவும் என்னால ஏத்துக்க முடியல. அவரு எங்களுக்காக தான் கனடால போய் கஷ்டப்பட்டுட்டு இருந்தாரு. அவரு இறந்தது கொரோனா டைம்ல. அதுனால அவர உடனே இங்க கூட்டிட்டு வர முடியல. கிட்டதட்ட அவர கனடால இருந்து கூட்டிட்டு வர ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. அவரு எங்களோட இல்லன்னு சொன்னதை என்னால ஏத்துக்க முடியல. அந்த விஷயத்த அக்சப்ட் பண்ணவே எனக்கு 3 நாளுக்கு மேல ஆச்சு. அந்த சமயத்துல என்கூடவும் யாரும் இல்ல.

அப்பாவ கூட்டிட்டு போக கஷ்டப்பட்டேன்

நான் சென்னையில 14 நாள் குவாரண்டைன்ல இருந்தேன். அதுக்கு அப்புறம் அப்பாவ கூப்பிட சென்னை ஏர்போர்ட் போன அங்கயும் அவங்க அப்பாவ அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க. என்கூட யாருமே இல்ல. தனி ஆளா நான் அவங்களோட சண்டை போடுறேன். அப்புறம் அங்க இருந்த சிங்கள ஆர்மி மேன் தான் எனக்கு ஹெல்ப் பண்ணாரு.

எங்க அப்பா, தன்னோட கடைசி காலம் சொந்த ஊர்ல இருக்கணும்ன்னும், அவருக்கான எல்லா சடங்கும் என்னோட அக்கா பண்ணனும்ன்னும் அவரு ஆசைப் பட்டாரு. அதுக்காக நான் வேற எதப்பத்தியும் யோசிக்காம எல்லோரோடையும் சண்ட போட்டு அவர வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்.

இன்னமும் இதை எல்லாம் செய்றேன்

அவரு இறந்துட்டாருன்னு கேள்விபட்டபோது என்கூட யாரும் இல்ல. அவரோட உடம்ப கொழும்புக்கு எடுத்துட்டு போன அங்க 14 நாள் குவாரண்டைன். அந்த தனிமை எல்லாம் ரொம்ப கொடுமையானது. இன்னும் அத நெனச்சாலே கஷ்டமா ஆகிடுதுன்னு பேசும் போதே கண்ணீர் அவரை நிறுத்தியது.

பின் தொடர்ந்து பேசிய அவர், எனக்கு இப்போவும் எதாவது கஷ்டம் வந்தா, சோகமா இருந்தா எண் அப்பா நம்பருக்கு கால் பண்ணுவேன். மெசேஜ் பண்ணுவேன். இந்த மாதிரியான் ஸ்டுபிட் விஷயங்கள இன்னமும் நான் செய்றேன். அவர் இல்லாததுனால என்னோட பொருப்பும் அதிகமாகிடுச்சு. நான் பேசுற விதம் யோசிக்குற விதம் எல்லாம் மாறிடுச்சு. ஒரு வார்த்தை பேசுறதுக்கு முன்ன நாலு முறை யோசிக்குறேன். இதெல்லாம் பயமா மெச்சூரிட்டியான்னு கூட தெரியல என தன் நிலையை எடுத்துக் கூறி ஆதங்கப்பட்டார்.

லாஸ்லியாவின் படங்கள்

இலங்கையில் இருந்து சென்னை வந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப். 2021ல் வெளியான இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சி்ங் நடித்திருப்பார்.

இதையடுத்து இவர் கூகுள் குட்டப்பா எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு பின் தற்போது மிஸ்டர் பவுஸ் கிளினிங், ஜென்டில் உமன் போன்ற படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி உ்ள்ளார். இவர் மேலும் பல படங்களில் நடித்து, வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் பெண்களுக்கு எடுத்துக்காட்டாய் அமைய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் வாழ்த்துகள்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article