ARTICLE AD BOX

தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான ஒரு சில பாடல்களில் உள்ள நடன அசைவுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டாகு மகாராஜா படத்தின் தபிடி திபிடி பாடலை தொடர்ந்து ராபின்ஹூட் படத்திலுள்ள ஒரு பாடல் வரிகளில் கெடிகா சர்மா ஆடியது பலருடைய விமர்சனத்திற்கும் ஆளானது. இப்படி தொடர்ந்து நடன நிகழ்வுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் தெலுங்கானா மகளிர் ஆணையம் இதுகுறித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது திரைப்படத்தில் பெண்களை இழிவு படுத்தும் விதமாக அருவருப்பாக காட்டுவது சரி கிடையாது. நடன இயக்குனர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் பொறுப்போடு செயல்பட வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.