ARTICLE AD BOX
Silk Saree Maintenance Tips : பட்டுப்புடவை வாங்கும்போது இருந்தது போலவே புதியதாக தோற்றமளிக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

புடவை கட்டுவது பல பெண்களுக்கு பிடித்தமான விஷயம். அதிலும் பட்டுப்புடவை தங்களை கூடுதலாக அழகாக்கி காட்டும் என்பதை பெண்கள் நன்கறிந்திருக்கிறார்கள். ஆனால் பட்டுப்புடவைகளை பத்திரமாக வைப்பதும், புதிது போல பராமரிப்பது பெரிய டாஸ்க். அதை சரியாக பராமரித்து விட்டால் எத்தனை ஆண்கள் ஆனாலும் புதிது போல இருக்கும். இந்த பதிவில் பட்டுப்புடவைகளை புதிது போல பராமரிக்கும் டிப்ஸ்களை காணலாம்.

நீங்கள் பட்டுப்புடவைகளை எப்போதும் உடுத்தமாட்டீர்கள். அதற்காக மாதக்கணக்கில் ஒரே இடத்தில் அப்படியே வைக்கக் கூடாது. சுமார் 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை அதை பீரோவில் இருந்து வெளியே எடுத்துக் காற்றோட்டமாக வைப்பது அவசியம். வீட்டுக்குள்ளே நிழலில் உலர விடுவதால் அவை ஈரப்பதமாக இருக்காது. குறிப்பாக அவற்றை மீண்டும் மடித்து பழைய மடிப்புகளை மாற்றி வைக்க வேண்டும்.

நீங்கள் புடவையை மடித்து அப்படியே பீரோவில் வைத்தால் அது சீக்கிரம் சேதமாகலாம். பிளாஸ்டிக் ஸ்டோரேஜ் கவரில் வைத்தால் கூட அது புடவையை சேதமாக்கலாம். நீண்ட நாட்கள் பட்டுப்புடவையை புதிது போல வைக்க வேண்டுமென்றால் மல் மல் பேக் அல்லது காட்டன் பையில் போட்டு வைக்க வேண்டும்.

பீரோவில் பூச்சிகள் வராமல் தடுக்க, வாசனைக்காக நாப்தலின் உருண்டைகளை வாங்கி வைப்போம். பட்டுப்புடவை வைக்கும்போது அதில் வாசனைக்காக வைக்கும் நாப்தலின் உருண்டைகள், பர்ஃபியூம் கவர்களை தவிர்க்க வேண்டும். இவை புடவையை சேதமாக்கலாம்.
இதையும் படிங்க: வெறும் 1 நிமிடத்தில் பட்டுப் புடவையை துவைக்கலாம் தெரியுமா? அதுவும் ரூ.5 செலவுல வீட்டிலேயே ட்ரை கிளீன்!!

நாம் வெளியே செல்லும்போது வாசனையாக இருக்க வேண்டும் என்பதற்காக பர்ஃபியூம் போட்டுக் கொள்வோம். ரொம நேரம் அந்த வாசனை இருக்க வேண்டுமென டிரஸ்ஸின் மீது சரமாரியாக அடித்து கொள்வோரும் உண்டு. பட்டுப்புடவைகள் அணியும்போது இந்த தவறை செய்யக் கூடாது. புடவைக்கு பக்கமாக ஸ்ப்ரே செய்யாமல் தள்ளி நின்று அடிப்பது நல்லது. உங்களுடைய புடவையில் ஸ்ப்ரே செய்யாமல் முழங்கைகள் மடங்கும் பகுதியில், கழுத்தில் அடித்தால் ரொம்ப நேரம் வாசனை இருக்கும். புடவையில் ரசாயனம் கலந்த பர்ஃபியூம் பட்டால் அது சேதமாகும்.
இதையும் படிங்க: பட்டுப் புடவைகளை வாஷிங் மெஷினில் எப்படி துவைப்பது? இது மட்டும் பண்ணிடாதீங்க!

மற்ற புடவைகளுடன் பட்டுப்புடவைகளையும் அடுத்தடுத்து சேர்த்து அடுக்கி வைக்க வேண்டும். பட்டுப்புடவைகளுக்கு என தனி இடம் ஒதுக்கி அதில் வையுங்கள். கொஞ்சம் இடவசதியுடன் வைப்பது நல்லது.