ஆரோக்கியமான கருப்பட்டி பணியாரம் இப்படி செஞ்சு கொடுத்து அசத்துங்க..!!

2 hours ago
ARTICLE AD BOX

ஆரோக்கியமான கருப்பட்டி பணியாரம் இப்படி செஞ்சு கொடுத்து அசத்துங்க..!!

ஆரோக்கியமான கருப்பட்டி பணியாரம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

ஒரு கிலோ பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து காய்ந்த துணியில் அரிசியை பரப்பி உலர விடவும். அரிசி லேசான ஈரப்பதத்துடன் இருக்கும் போதே அரைத்து ரவை சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து கருப்பட்டி முழுவதும் கரைந்து உடனே அடுப்பிலிருந்து இறக்கி அதை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். கருப்பட்டி கரைசலை சிறிது சிறிதாக பச்சரிசி மாவில் சேர்த்து கிளறி நெய் தடவி மூடி வைக்க வேண்டும். பணியாரம் செய்யும்போது மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஓர் அகலமான குழி கரண்டியால் மாவினை சேர்த்து எண்ணைய் அல்லது நெய் ஊற்றவும். பின்பு ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட வேண்டும். நன்றாக வெந்து பிரவுன் கலர் வந்ததும் எடுத்தால் சுவையான கருப்பட்டி பணியாரம் தயார். கண்டிப்பா நீங்களும் உங்க வீட்டு குழந்தைகளுக்கு இதை செஞ்சு கொடுங்க ரொம்ப ஆரோக்கியமும் சத்தும்தரக்கூடிய ஒரு உணவு.

Read Entire Article