பஞ்சாபில் 32 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர்: காங். தகவல்

3 hours ago
ARTICLE AD BOX

சண்டிகர்: பஞ்சாபில் 32 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தன்னுடன் தொடர்பில் உள்ளதாக பஞ்சாப் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பர்தாப் சிங் பஜ்வா தெரிவித்துள்ளார். பஞ்சாபில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான பர்தாப் சிங் பஜ்வா கூறுகையில், முதல்வர் பக்வந்த் மான் பாஜவுடன் தொடர்பில் இருக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவால் அவரை நீக்குவதற்கு முடிவு செய்தால் அவர் பாஜவில் சென்று இணைந்துவிடுவார். எனது 45 ஆண்டுகால அனுபவத்தில் ஒருபோதும் எந்த தவறான அறிக்கையையும் வெளியிடவில்லை. இந்த ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் எண்ணம் காங்கிரசிடம் இல்லை. 32எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர் என்று நான் மீண்டும் சொல்கிறேன். எம்எல்ஏக்கள் மட்டுமல்ல அமைச்சர்களும் கூட என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இது அவர்களின் கடைசி பதவிக்காலம் என்பது தெரியும். அவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு புதிய கட்சியை தேடுகிறார்கள். யார் கொண்டு வரப்படுவார்கள், யார் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம். அது சரியான நேரத்தில் நடக்கும் என்றார்.

The post பஞ்சாபில் 32 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர்: காங். தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article