நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நம் சமையலறை சூப்பர் உணவுகள்!

1 day ago
ARTICLE AD BOX

நமது உடலுக்கு வரும் வெளிப்புற அச்சுறுத்தல்களான காய்ச்சல், வைரஸ், சளி போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி பயன்படுகிறது. தொற்றுகளை அடையாளம் காணும் ஒரு அதிநவீன அமைப்பாக எச்சரிக்கையுடன் நமது வெள்ளை இரத்த அணுக்களைப் பயன்படுத்தி நமது நலத்துக்கு உதவும் எதிர்வினையைத் தொடங்குகிறது. இது சரியான ஆன்டிபாடிகளை விரைவாக அனுப்புவதால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் தவிர்க்கப்படுகிறது.

இருப்பினும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் (புகைபிடித்தல் மற்றும் பிற காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் துகள்கள், அதிகப்படியான மது), உடல் பருமன், மோசமான உணவு, மன அழுத்தம் , தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடும். நோயெதிர்ப்பு அமைப்பு குறைந்தால் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

எனவே, நமது ஆரோக்கியத்தில் முக்கிய செயல்பாடு காரணமாக, வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பராமரிக்க அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும். அதில் முதன்மையானது நாம் இயங்க சக்தி தரும் உணவுகள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர் உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர்களும் பரிந்துரை செய்வர்.

குறிப்பாக நோய் வந்தபின் பரிந்துரைக்கப்பட்ட பின்விளைவுகள் தரும் மருந்துகளைத் தேடுவதற்குப் பதிலாக, ஆரோக்கியமான, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் வடிவில் இயற்கை மருந்துகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. ஒவ்வொரு நாளும் முன்பே உணவுமுறைகளை தேர்வு செய்வது உங்கள் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதிக அளவில் விரும்பும் சில உணவுகளில் மட்டும் கவனம் செலுத்துவதை விட, உங்கள் அன்றாட உணவில் பல்வேறு வகையான சமச்சீர் ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

சூப்பர் உணவுகளைத் தேடி நாம் எங்கும் அலைய வேண்டாம். நம் சமையலறையிலேயே உள்ளது எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் உணவுகள். அவை என்ன என்பதை இங்கு காண்போம்.

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் உள்ள ப்ராக்கோலி, முருங்கை போன்ற இலைக் கீரைகள் சூப்பர் உணவுகள். அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான வெள்ளை இரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தி ஆக உதவுகின்றன. வைட்டமின் சி நிறைந்த திராட்சைப்பழம், ஆரஞ்சுகள், எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவைகளை அன்றாடம் உணவில் சேர்க்க வேண்டும்.

மேலும் ஏராளமான சல்பர் கொண்ட அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தில் அதிகரித்த செயல்பாட்டைத் தொடங்கும் பிற சேர்மங்கள் உள்ள பூண்டு, இஞ்சரோல் என்ற மூலக்கூறுடன் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் இஞ்சி, குர்குமின் என்ற பொருளை உள்ளடக்கி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் திறனுக்காக ஆராய்ச்சியில் நிருபித்துள்ள மருத்துவ மூலிகையான மஞ்சள் போன்ற நம் வீட்டு சமையலறை மூலிகைகளையும் உணவுகளில் சேர்ப்பது எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
சோர்வடைந்த கண்களுடன் போராட்டமா? என்னன்னு உடனே பாருங்க!
Immunity Food
Read Entire Article