ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் டாப் 4 அணிகள்: ஆர்சிபிக்கு வாய்ப்பில்லையாம்!

9 hours ago
ARTICLE AD BOX

Top 4 Teams Will Reach IPL 2025 Playoff : ஐபிஎல் 2025: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடரின் இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் குறித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் கணித்துள்ளார். அதை பற்றி பார்க்கலாம்.

Top 4 Teams Will Reach IPL 2025 Playoff : ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் நாளை நடைபெறும் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த 17 சீசன்களாக ஒரு முறை கூட டிராபி ஜெயிக்காத ஆர்சிபி அணிக்கு இந்த ஐபிஎல் 2025 தொடர் ரொம்பவே முக்கியமானது.

IPL 2025 Standings, IPL 2025 Points Table

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் மட்டுமின்றி ஆர்சிபி ரசிகர்களும் ஈ சாலா கப் நமதே என்று கனவு கோட்டை கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று ஆர்சியின் முன்னாள் பயிற்சியாளர் மை ஹெசன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் டாப் 4 அணிகள் குறித்தும், ஆர்சிபி ஏந்த இடம் பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

Royal Challengers Bengaluru Coach Predicts IPL 2025 Standings

இது குறித்து தனது யூடியூப் வீடியோவில் ஐபிஎல் 2025ல் அணிகளின் தரவரிசையை கணித்துள்ளார். அதன்படி இதற்கு முன்னதாக பயிற்சியாளராக இருந்த ஆர்சிபி அணியாது ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடிக்கும் என்று கணித்துள்ளார். இதே போன்று புதிதாக லக்னோவிற்கு கேப்டனான ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 10ஆவது இடம் பிடிக்கும் என்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் 9ஆவது இடம் பிடிக்கும் என்று கணித்துள்ளார்.

IPL 2025, Cricket, T20, Sports News Tamil, Asianet News Tamil

மேலும், 2022ல் ஐபிஎல் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடிக்கும். அதோடு, இந்த தொடரில் 2 அணிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார். அதன்படி அக்‌ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு வராது.

IPL 2025 Captains, Mike Hesson, Royal Challengers Bengaluru

அதோடு இந்த 2 அணிகளும் முறையே 6 மற்றும் 5ஆவது இடங்களை பிடிக்கும். மேலும், ஹெசனின் கணிப்பின்படி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 4ஆவது இடத்தை பிடிக்கும். பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது லீக் போட்டிகளின் முடிவி 3ஆவது இடத்திற்கு முன்னேறும்.

CSK, Punjab Kings, IPL 2024 Playoff Teams

கடைசியாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்று கணித்துள்ளார். இது பிளே ஆஃப் சுற்றுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டு சாம்பியன் ஆனதிலிருந்து 2023ல் மட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு ஒரு முறை மட்டுமே தகுதி பெற்றது. மேலும், 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதிலிருந்து அவர் மீது அதிக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. எனினும் கடைசியாக மும்பை இந்தியன்ஸ் 10ஆவது இடம் பிடித்து வெளியேறியது.

IPL 2025 Points Table, Lucknow Super Giants, Mumbai Indians, Chennai Super Kings

இறுதியாக லீக் போட்டிகளின் முடிவுகளின் படி 2ஆவது இடத்தை பிடிக்க போவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான். என்னதான் நடப்பு சாம்பியனாக இருந்தாலும் கேகேஆர் அணி 2ஆவது இடத்திற்கு முன்னேறும். இறுதியாக லீக் போட்டிகளின் முடிவுகளின் படி 2ஆவது இடத்தை பிடிக்க போவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான். என்னதான் நடப்பு சாம்பியனாக இருந்தாலும் கேகேஆர் அணி 2ஆவது இடத்திற்கு முன்னேறும். இது வெறும் ஐபிஎல் 2025 பிளே ஆஃப் அணிகள் மட்டுமே. அவர் இறுதிப் போட்டிக்கு செல்லும் அணிகள் குறித்தோ, டைட்டில் வெல்லக் கூடிய அணி குறித்தோ பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article