அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

8 hours ago
ARTICLE AD BOX

சென்னை: எழும்பூர் சிராஜ் மஹாலில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு துணை தலைமை ஹாஜி முகமது அக்பர் அலி ஷா ஆமிரி, தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜனாப் ஹாஜி ஆற்காடு இளவரசர் முகமது அலி, அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர்ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘அதிமுக பல்வேறு நன்மைகளை செய்து கொடுத்திருக்கிறது. புனித ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு வந்தது. நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு விலை இல்லா சந்தனக் கட்டைகளை வழங்கினோம். உலமாக்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஒன்றிய அரசு ஹஜ் புனித பயண நிதியை ரத்து செய்தபோதும், நாங்கள் அந்த நிதியை தொடர்ந்து அளித்து வந்தோம். ஹஜ் பயணத்திற்கான நிதியை ரூ.10 கோடியாக உயர்த்தியதுடன், ஹஜ் யாத்திரிகள் சென்னையில் தங்குவதற்கு புதிதாக ஹஜ் இல்லம் கட்டப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை அதிமுக அரசு செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article