ARTICLE AD BOX
வெயில் காலத்தில் வெளியே எங்கு சென்றாலும் மிகவும் சிரமமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் வீட்டில் இருந்தாலும், வெக்கை அதிகமாகவே இருக்கும். வீட்டில் ஏ.சி இருப்பவர்கள் கோடை காலத்தை சமாளித்து விடுவார்கள். ஆனால், ஏ.சி இல்லாதவர்களின் நிலை சற்று கடினம் தான்.
இதற்காக, வீட்டில் ஏ.சி இல்லாதவர்கள் எளிதாக பின்பற்றக் கூடிய சில டிப்ஸ்களை இதில் காணலாம். இந்த ட்ரிக்ஸ் அனைத்தும் Minutes Mystery யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வீட்டிற்கு வெளியே இருக்கும் வெயிலின் அளவு சுமார் 75 டிகிரி ஃபேரன்ஹீட்டை தொட்டு விட்டால், நம் வீட்டின் ஜன்னலை கட்டாயமாக மூடி விட வேண்டும். அதற்கு குறைவான வெப்பம் இருந்தால் மட்டுமே வீட்டின் ஜன்னலை திறக்க வேண்டும்.
எனவே, மதிய நேரத்தை தவிர்த்து காலை மற்றும் மாலையில் மட்டுமே வீட்டின் ஜன்னலை வெயில் காலத்தில் திறக்க வேண்டும். இதேபோல், மற்றொரு டிப்ஸையும் எளிதாக பின்பற்றலாம். வீட்டில் இருக்கும் காட்டன் துண்டை நன்றாக நனைத்து விட்டு, அதனை ஜன்னல் மீது போட்டு விடலாம். இப்படி செய்யும் போது வெப்பத்தின் தாக்கம் குறையும்.
இது தவிர மாலை நேரத்தில் வீட்டின் தரையை தண்ணீர் ஊற்றி கழுவி விடலாம். இப்படி செய்தால் இரவில் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். எனினும், தண்ணீர் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இரவில் நடக்கும் போது தரையில் தண்ணீர் நிறைய இருந்தால், அதில் வழுக்கி விழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதற்கு ஏற்றார் போல் தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
வெயில் காலத்தில் பாலிஸ்டர் கொண்டு செய்யப்பட்ட போர்வை மற்றும் படுக்கை விரிப்புகளை தவிர்த்து விடுவது நல்லது. இவை வெப்பத்தை உருவாக்கக் கூடும். இதற்கு பதிலாக வெயில் நேரத்தில் காட்டன் அல்லது லினென் கொண்டு செய்யப்பட்ட போர்வைகளை பயன்படுத்தலாம்.
இதில் கூறப்பட்டுள்ள சிம்பிளான டிப்ஸை பயன்படுத்தி நம் வீட்டை கூடுமானவரை குளிர்ச்சியாக பராமரிக்க முடியும்.
நன்றி - Minutes Mystery Youtube Channel