ARTICLE AD BOX
மகாகும்ப்நகர்: உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தை சேர்ந்த சுமார் 50 லட்சம் பக்தர்கள் நேற்று புனித நீராடினார்கள். உத்தரப்பிரதேசத்தின் மகாகும்ப்நகரில் நடந்துவரும் மகா கும்பமேளா வருகிற 26ம் தேதியுடன் முடிவடைகின்றது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் கும்பமேளாவிற்கு நேற்று நேபாளத்தை சேர்ந்த சுமார் 50லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். இவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி கங்கையை வழிபட்டனர்.
இவர்கள் ஜனக்பூரில் இருந்து புனித பொருட்களை அனுமனுக்கு படைப்பதற்காக கொண்டுவந்தனர். அதே நேரத்தில் அவர்கள் திரிவேணி சங்கமத்தில் இருந்து கங்கை நீரையும், புனித மண்ணையும் கொண்டு சென்றனர். இதனை அவர்கள் விலைமதிப்பற்ற பாரம்பரிய பொருளாக கருதுகிறார்கள்.இவை அங்கு பல்வேறு மத விழாக்களில் பயன்படுத்தப்படுகின்றது. திரிவேணி சங்கமத்தில் நீராடிய பின்னர், அயோத்தியில் ஸ்ரீராமர் மற்றும் காசியில் விஸ்வநாதரையும் தரிசனம் செய்வதில் நேபாள பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
The post நேபாளத்தை சேர்ந்த 50 லட்சம் பக்தர்கள் புனித நீராடல் appeared first on Dinakaran.