ARTICLE AD BOX
திருநெல்வேலியில் இசுலாமிய சமூக ஆர்வலர் ஜாகிர் உசேன் சில நாள்களுக்கு படுகொலை செய்யப்பட்டார். இரண்டு பேர் சரண் அடைந்த நிலையில், முக்கியமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தௌபீக் என்கிற கிருஷ்ணமூர்த்தியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
கொல்லப்பட்ட உசேனின் மகன், தங்கள் குடும்பத்தினரை யாரோ நோட்டமிடுவதாகவும் கண்காணிப்பதாகவும் காணொலி வெளியிட்டார்.
அதையடுத்து அவரின் குடும்பத்துக்கு ஆயுதமேந்திய காவல் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இந்த நிலையில், படுகொலையில் உசேனைப் பற்றி தகவல் தெரிவித்ததாக சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
சிறார் நலச் சட்டப்படி, அந்தச் சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.