ARTICLE AD BOX
தமிழகத்தில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் (மார்ச் 23, 24) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கன மழை பெய்யக்கூடும், மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 24 முதல் மார்ச் 29 ஆம் தேதி வரை மேலே குறிப்பிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here to Join Enewz Whatsapp Group
The post தமிழகத்தில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! appeared first on EnewZ - Tamil.