ARTICLE AD BOX
வீல் சேரில் இருந்தாலும் சிஎஸ்கேவுக்காக விளையாடுவேன் என்று எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்த சீசனில் தனது ஓய்வு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

CSK MS Dhoni breaks silence on retirement talks: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். 44 வயதான தோனிக்கு இதுதான் கடைசி சீசன் என கூறப்படுகிறது.

இந்த ஐபிஎல் சீசனின்போது தோனி ஓய்வு பெறுவது உறுதியாகி உள்ளதாகவும் சேப்பாக்கத்தில் நடக்கும் கடைசி லீக் போட்டியின்போது தோனி ஓய்வு பெற்று விடுவார் என தகவல்கள் உலா வந்தன. மேலும் 2025 ஐபிஎல்லில் இம்பேக்ட் வீரராக மட்டுமே களமிறங்கும் தோனி ஒரு சில போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவார் எனவும் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி இருந்தனர்.
MI vs CSK: தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்வார்? ருதுராஜ் கெய்க்வாட் கொடுத்த அப்டேட்!

இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக நீண்டகாலம் விளையாடுவேன் என தோனி கூறியிருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 'எல் கிளாசிகோ' மோதலுக்கு முன்னதாக ஜியோ ஹாட்ஸ்டாரிடம் பேசிய தோனி, தான் விரும்பும் வரை சென்னை அணிக்காக விளையாட முடியும் என்று கூறியுள்ளார்.
CSK அணிக்காக நான் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாட முடியும். அதுதான் என்னுடைய அணி. நான் சக்கர நாற்காலியில் இருந்தாலும், அவர்கள் (ரசிகர்கள்) என்னை விளையாட இழுத்துச் செல்வார்கள்'' என்று தோனி தனது பேட்டியில் கூறியிருக்கிறார். இது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது. இந்த பேட்டியின் மூலம் தோனி தனது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்த தோனி, சிஎஸ்கே அணிக்காக கடந்த 2008ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். சுமார் 15 ஆண்டுகள் சிஎஸ்கே கேப்டனாக இருந்துள்ள அவர் அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 264 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 24 அரைசதங்களுடன் 5243 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
CSK vs MI: சிஎஸ்கேவின் மெயின் பிரச்சனையே இதுதான்! இதை சரி செய்தால் கப் கன்பார்ம்!