<p>மும்மொழிக்கொள்கை தமிழ்நாட்டுக்கு தேவையில்லாதது என்றும் இந்த நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். கல்விக்கான நிதியை விடுவிக்க மறுப்பது தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இழைக்கும் துரோகம் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு மீது மக்கள் வேதனையும், வெறுப்பும் அடைந்துள்ளனர் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.</p>