நாடு முழுவதும் 67 பயங்கரவாத அமைப்புகள் தடை…! மத்திய உள்துறை அதிரடி

1 day ago
ARTICLE AD BOX

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 67 பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 67 பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சட்டவிரோத குழுக்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை மத்திய உள்துறை அமைச்கம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் யுஏபிஏ பிரிவு 35-ன் கீழ் அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்ட 45 தீவிரவாத அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இவை அந்த சட்டத்தின் முதல் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 22 தீவிரவாத குழுக்கள் யுஏபிஏ பிரிவு 3 (1)-ன் கீழ் சட்டவிரோத குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பல அமைப்புகள் இந்தியா முழுவதும் பிரிவினைவாதம் மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டவை.இந்தியாவில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவதற்காக அந்த அமைப்புகளின் சொத்துகளை முடக்குவது, அதன் உறுப்பினர்களை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு

தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ), இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம், பப்பர் கல்சா இண்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி, ஹர்கத்-உல்-முஜாகிதீன், ஹிஸ்புல்-முஜாகிதீன், ஜம்மு-காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, அசாம் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, மக்கள் விடுதலை ராணும் (பிஎல்ஏ), காங்லீபாக் கம்யூனிஷ்ட், மணிப்பூர் விடுதலை முன்னணி, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, அல்-காய்தா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

The post நாடு முழுவதும் 67 பயங்கரவாத அமைப்புகள் தடை…! மத்திய உள்துறை அதிரடி appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article