ARTICLE AD BOX

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பில் 38,956 பேருக்கு ரூ.200.27 கோடி மதிப்பு நலத்திட்டங்களை வழங்கினார். ரூ.139 கோடி மதிப்பிலான கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்து வைத்தார்.
‘தளபதி அறிவாலயம்’ என நாகை மாவட்டக் கழகத் தொண்டர்களால் பெயரிடப்பட்ட இக்கட்டடத்தையும், பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து சிறப்பித்தார்.
மேலும் நாகை மாவட்டத்திற்கான ஆறு முக்கிய அறிவிப்புகளையும்வெயிட்டார். நாகை மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள் என்னென்ன என்ற முழு விவரங்களை பார்ப்போம். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, “நாகை மாவட்டத்தில் ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு பேரிடர் மையங்கள் கட்டப்படும்.
விழுந்தமாவடி, வானமாமகாதேவி பகுதியில் ரூ.12 கோடி செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும். வேதாரண்யம் தலைஞாயிறில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். சென்னை நங்கநல்லூரில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும்.
150 ஆண்டுகால பழமைவாய்ந்த நாகப்பட்டினம் நகராட்சிக் கட்டிடம் ரூ.4 கோடியில் புதுப்பிக்கப்படும். நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதியில் இருக்கும் பல்வேறு வடிகால்கள், வாய்க்கால்கள், மதகுகள், இயக்கு அணைகள் ரூ.32 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.
வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தென்னடார் பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். காவிரி டெல்டா பகுதியில் அனுமதிக்கத்தக்க, வேலைவாய்ப்புகள் அளிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.