1 மாத குழந்தையை மிதித்து கொன்ற போலீஸ்.. ராஜஸ்தானில் பெரும் சோகம்.!

4 hours ago
ARTICLE AD BOX

சோதனை செய்தபோது ஒரு மாத பச்சிளம் குழந்தையை போலீஸ் மிதித்ததில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் சைபர் கிரைம் குறித்த ஒரு புகார் அளிக்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக கடந்த மார்ச் 1ம் தேதி போலீசார் ஒரு வீட்டிற்கு சோதனை செய்ய சென்றுள்ளனர். அப்போது, தாயிருக்கு அருகே உறங்கிக் கொண்டிருந்த ஒரு மாத பச்சிளம் குழந்தையை போலீசார் மிதித்துள்ளனர்.

இதில் அந்த குழந்தை பலியாகியதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட போலீசாரை கைது செய்ய வேண்டுமென அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். குற்றவாளியான ஒரு நபரை போலீசார் கைது செய்யும் அவசரத்தில் குழந்தையை கவனிக்காமல் மிதித்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ரூ.1 ஒரு தேங்காய் போதும்.. வரதட்சணையை மறுத்த மருமகன்.. நெகிழ்ச்சி செயல்.!

எனவே இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, குழந்தை உயிரிழந்த வழக்கையும் போலீசார் சேர்த்து விசாரித்து வருகின்றனர். பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அப்பளமாக நொறுங்கிய கார்.. ஆன்மீக சுற்றுலாவில் நேர்ந்த சோகம்.. கார் - லாரி மோதி 5 பேர் பரிதாப மரணம்.!

Read Entire Article