ARTICLE AD BOX
வீடு புகுந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறு வரும் அதே வேளையில் ஒரு ஓட்டுநர் தன் ஆட்டோவில் தவறவிட்ட 15 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த சம்பவம் மதுரையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்ற நபர் தன் குடும்பத்துடன் ஆட்டோவில் பயணித்துள்ளார். தவிட்டு சந்தை பகுதியில் ஏறிய அந்த குடும்பம் தெப்பக்குளம் பகுதியில் இறங்கி இருக்கின்றனர். அப்போது, சரவணகுமார் கொண்டு வந்த பையை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளார்.
ஆட்டோவை ஓட்டி வந்த நாகேந்திரன் என்பவர் ஆட்டோவில் கைப்பை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பையை திறந்து பார்த்துள்ளார். அந்த பைக்குள்ளே செல்போன், 15 சவரன் நகைகள் உள்ளிட்டவை இருந்தது. இதை உடனடியாக போலீசில் ஒப்படைக்க நினைத்த நாகேந்திரன் விரைந்து சென்று காவல்துறையினரிடம் பையை ஒப்படைத்துள்ளார்.
இதையும் படிங்க: முதிய தம்பதியின் முடிவால் சோகம்.. கடன் தொல்லையால் விஷம் குடித்து கணவர் பலி., மனைவி உயிர் ஊசல்.!
இது உரிமையாளர் சரவணகுமாரிடம் சென்றடைந்தது. இந்த சம்பவம் மதுரை காவல் ஆணையர் லோகநாதனுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆட்டோ ஓட்டுநர் நாகேந்திரனை நேரில் அழைத்த அவர் அவரது நேர்மையான இந்த செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றார்.
இதையும் படிங்க: ஏய் சாஞ்சிருச்சு.. ஐயோ ஜேசிபி ஆபரேட்டர் என்ன ஆனார்? மாட்டுத்தாவணியில் நடந்த அசம்பாவிதம்.. பதறவைக்கும் காட்சிகள்.!