நகைக் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய முடிவால் மக்கள் அதிர்ச்சி!

18 hours ago
ARTICLE AD BOX

வங்கிகளில் நகைக் கடன்களில் கால அவகாசம் முடியும்போது, வட்டி மட்டும் செலுத்தி திருப்பி வைக்கும் நடைமுறையை மாற்றி, புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறையின்படி, ஒவ்வோர் ஆண்டும் வங்கிகளில் நகை அடகு வைத்ததற்கான வட்டியை மட்டும் செலுத்தி, அதே நாளில் நகையை மீட்டு மீண்டும் மறு அடகு வைக்க முடியும். ஆனால், இந்த நடைமுறையில் திருத்தம் கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, நகைக் கடன்களின் கால அவகாசம் முடிந்தாலும், அசலுடன் வட்டியையும் சேர்த்து கொடுத்து, நகையை மீட்டபின்னர், அதனை மறுநாள்தான் மீண்டும் மறு அடகு வைக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நடைமுறையால் நகைக் கடன் பெறும் ஏழை, எளிய, விவசாயிகள், நடுத்தர மக்கள் என பலதரப்பட்டோரும் கடுமையான பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள்!

இதுவரை, வட்டி மட்டும் கட்டி வந்து, கால அவகாசம் ஓராண்டு அல்லது ஆறு மாதத்தில் நிறைவு பெற்றதும், ஒரே நாளில் அதனை மறு அடமானம் வைத்து விடலாம். இதனால், நகைக் கடன் வாங்கியவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நகை, ஏலத்துக்குப் போகாது. எப்போது பணம் வருகிறதோ அப்போது மீட்கலாம் என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்தார்கள்.

ஆண்டுதோறும் வட்டி மட்டும் கட்டிவிட்டு, கடனை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு கடினமானதாக மாற்றிவிடும் என்று பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Read Entire Article