ARTICLE AD BOX
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, தோப்புபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரகு (வயது 29). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றி வருகிறார். மார்ச் 03 அன்று ரகுவுக்கு திருமணம் நடந்தது. இவரின் மனைவி வெளிமாநிலத்தில் பட்டப்படிப்பு படிக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள செங்கோடம்பள்ளம், மாருதி நகரில் வசித்து வருபவர் வைஷ்ணவி (24). ஈரோடு நாடார் மேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வைஷ்ணவி - ரகு ஆகியோர் கடந்த ஆறு மாதமாக பேசிபழகி வந்துள்ளனர்.
வழிப்பறி சம்பவம்
இதனிடையே, மார்ச் 13 அன்று ரகு வைஷ்ணவியின் வீட்டிற்கு சென்றதாக தெரியவருகிறது. அங்கு, ரகுவுக்கு அறிமுகமான திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சுனிதா என்பவர் இருந்துள்ளார். இவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க: லாரி - இருசக்கர வாகனம் மோதி நேர்ந்த சோகம்; முதியவர் பரிதாப பலி.!
அப்போது, திடீரென வீட்டுக்குள் 25 வயது மதிக்கத்தக்க 4 பேர் வந்து, ராகுவை தாக்கி இருக்கின்றனர். மேலும், அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரம் பணத்தையும் பறித்துச் சென்றனர். இந்த விஷயம் குறித்து ரகு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் ஓட்டுநர் மெய்யரசு (23) என்பவரை கைது செய்தனர். 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
விசாரணையில், ரகுவை திட்டமிட்டு பணம் பறிக்கும் முயற்சியில் தோழிகள் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: ஈரோடு: விளையாட்டின்போது சிறுவனுக்கு பாம்பு வடிவில் வந்த எமன்; மகனை இழந்து கதறித்துடிக்கும் பெற்றோர்.!