துலாம் ராசிக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன்.. வேலை, தொழிலில் சூப்பர் அதிர்ஷ்டம்

14 hours ago
ARTICLE AD BOX

துலாம் ராசிக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன்.. வேலை, தொழிலில் சூப்பர் அதிர்ஷ்டம்

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் மாத பலன்: ஏப்ரல் மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் பெறும் நற்பலன்கள் என்ன, பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கை பல அதிர்ச்சியான விஷயங்களையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் துலாம் ராசியினர் பெறும் நல்ல பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

April month rasi palan Thulam

துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 ஏப்ரல் மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். உங்களுக்கு வரும் வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய அனுபவங்களைப் பெறக்கூடிய மாதமாக இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் விஷயங்களை நன்றாக கற்றுக் கொள்வது நல்லது. மிகப்பெரிய எதிர்காலத்தை உங்களுக்கு கொடுக்கும்.

துலாம் ராசியில் 6 ஆம் இடத்தில் உட்கார்ந்து உச்சம் அடைவதால் அற்புதமான வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும். ஒப்பந்தப் பணி, நிரந்தர வேலை எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். உங்களுக்கான எதிர்காலம் காத்திருக்கிறது. வேலைப் பளு இருந்தாலும் அந்த வேலையை எப்படி சுலபமாக முடிப்பது என்பதை கற்றுக் கொள்வது நல்லது.

சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால் நல்ல வருமானம் கிடைக்கும். பணம் கையில் இருந்துகொண்டே இருக்கும் சூழல் ஏற்படும். லாபாதிபதியும், ராசியாதிபதியும் ஒன்று சேர்ந்து அமர்ந்துள்ளதால் மிகப்பெரிய லாபம் தொழிலில் கிடைக்கும். தன ஸ்தானதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உட்காருவதால் ஏப்ரல் 7 ஆம் தேதிக்குப் பிறகு அபரிமிதமான பண வரவு உண்டாகும்.

தொழிலில் நல்ல வேலை ஆட்கள் அமைவார்கள். தொழிலுக்கான கடனுதவி கிடைக்கும். லோன் சார்ந்த விஷயங்கள் கிடைக்கும். குடும்பத்தின் தொழிலை எடுத்து செய்யும் யோகம் வரும். தன ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் யோகமான நேரமாக இருக்கும். 3 ஆம் அதிபதியாக இருக்கக்கூடிய குரு பகவான் 6 ஆம் இடத்தில் அமருவதால் இளைய சகோதரருக்கு சில பாதிப்புகள் இருக்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.

கடின உழைப்பை போட வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி பகவான் படிப்பில் நல்ல வளர்ச்சியைக் கொடுப்பார். படிப்புகளில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். 6 ஆவது ஸ்தானம் என்பது சனிக்கு நல்ல ஸ்தானம் என்பதால் துலாம் ராசியினருக்கு சனி பகவான் உதவுவார். ஹயக்ரீவர் வழிபாடு அற்புதமான பலன்களைத் தரும். உயர்கல்வி படிக்கும் வாய்ப்புகள் பலருக்கு உண்டாகும்.

வெளியிடத்தில் தங்கி படிப்பவர்களுக்கு கூடுதல் கவனமாக படிப்பு மற்றும் வாழ்க்கையில் இருப்பது நல்லது. வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கக்கூடிய பெண்கள் உங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்தக் கூடியது நல்லது. முடிந்தவரை துலாம் ராசியினர் இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது. மிகவும் நல்ல மாதமாகத்தான் உங்களுக்கு உள்ளது.

7 ஆம் இடத்துக்குரிய செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருப்பதால் திருமணத்துக்கு வரன் அமையும். வெளிநாட்டில் சென்று படிக்கக்கூடிய யோகமாக இருக்கும். சிலருக்கு கழிவு உறுப்புகளில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பொதுவெளியில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. கண் சம்பந்தமான பிரச்சனை, சர்க்கரை, உணவுப் பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் வளர்ச்சி உண்டாகும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். எல்லா வகையிலும் வெற்றியைத் தரக்கூடிய மாதமாக இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம் - ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு அருமையான பலன்களைத் தரும்.

More From
Prev
Next
English summary
This astrology article provides detailed information about the benefits, remedies, and things to be cautious about for Thulam (Libra) in the month of April.
Read Entire Article